திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கட்டைமேடு குட்டை கிராமத் தைச் சேர்ந்தவர் பார்த்திபன். ரூ.500 வழிப்பறி செய்த வழக்கில் இவரை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு காஞ்சீபுரம் செசன்சு கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் நிபந்தனை ஜாமீன் கொடுத்தது. அந்த ஜாமீன் உத்தரவில் ரூ.10 ஆயிரத்திற்கான ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மாதம் வரை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ரூ.50 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 5 ஆண்டுக்கு டெபாசிட் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றி அமைக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பார்த்திபன் மனுதாக்கல் செய்தார். இவரது சார்பில் வக்கீல் என். துரைசாமி ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ் ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என்று காஞ்சீபுரம் கோர்ட்டு விதித்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ‘’ஜாமீன் வழக்கில் நிபந்தனை விதிக்கலாம். ஆனால் அந்த நிபந்தனையானது இதுபோன்ற நிபந்தனை விதிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. நிபந்தனையை நிறைவேற்றும் தகுதி மனுதாரருக்கு இருக்கிறதா? என்பதை கோர்ட்டு கவனத்தில் கொள்ளவேண்டும்.பணம் வேண்டும் என்பதற்காகத்தான் மனுதாரர் வழிப்பறி செய்துள்ளார். அவருக்கு மேலும் 2 பூஜ்ஜியத்தை சேர்த்து அபராதம் விதித்தது இயற்கை நீதிக்கு மாறானது’’கூறியுள்ளார்.
No comments:
Post a Comment