தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.இடையில பேசாதீங்க குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும்.தவறை ஒப்புக்கொள்ளுங்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அடிக்க கை நீட்டாதீர்கள் எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள். பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.கோபத்திற்கு முற்றுப்புள்ளி எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:
Post a Comment