வழக்குகளில் காவல்துறையினர் பதிவு செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சலீம் குலாப் பதான் என்பவர் தமது மனைவி நஷாபீயை எரித்துக் கொன்றதற்காக அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சலீம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமது மனைவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் காவல்துறையினர் தமது மனைவியிடம் மரண வாக்குமூலம் பெற்ற போது அவர் சுயநினைவில் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சலீமின் மனுவை தள்ளுபடி செய்தது. போலீசார் அவரது மனைவியிடம் பெற்ற மரண வாக்குமூலம் செல்லும் என்றூம் மாஜிஸ்திரேட்டுதான் வாக்குமூலம் பெற வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment