|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 October, 2012

டயட்...

உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம்.  உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ராலானது இருக்கும். கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், விரைவில் இதய நோய், புற்றுநோய் போன்றவை வந்துவிடும். பெண்களை விட, ஆண்களுக்கு தான் விரைவில் இதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும். டயட் மேற்கொள்ளும் பொழுது  தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும்.
நவதானியங்களில் சத்துக்கள்  பாக்கெட்டாக உள்ளது. அதிலும் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து உள்ளன. இது  சிறந்த உணவுப்பொருள். இதில் உள்ள வைட்டமின் பி9 ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைக்கும். கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
 சால்மன்  கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதிலும் சால்மன் என்னும் மீனில் அதிகம்  இந்த மீனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு ஒரு ஆயில்மெண்ட் போன்றது. இதை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறைந்துவிடும்.
 பூண்டு  பூண்டின் நன்மைகளுக்கு அளவே இல்லை. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால், புரோடெஸ்ட் புற்றுநோய் தடைபடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
மாதுளை  மாதுளையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  தினமும் உணவில் சேர்க்கும் போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். நிறைய ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோடெஸ்ட் புற்றுநோய் குறைந்துவிடும்.
முட்டை கூந்தல் உதிர்தல் அதிகமாக இருந்தால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி7 சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும்  மஞ்சள் கருவில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது.  இரத்த சோகை குறைந்து கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
 ப்ளூபெர்ரிஸ்  ப்ளூபெர்ரி பழங்கள் புரோடெஸ்ட் புற்றுநோயை தடுக்கும்  ஆய்வுகள் பலவற்றில், இந்த பழத்தின் நன்மைக்கு அளவே இல்லை, இது இதய நோய், ஞாபக சக்தி குறைவு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை குறைக்கும் என்று கூறுகிறது.
 பச்சை காய்கறிகள்  டயட்டில் இருக்கும் பொழுது  முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுக் பொருட்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் புரோடெஸ்ட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது இதனை உணவில் சேர்ப்பது நல்லது.
 பிரேசில் நட்ஸ்  நெட்ஸ் என்றால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். அதிலும் பிரேசில் நட்ஸ்  சிறந்தது. இதில் செலினியம் எனும் பொருள் அதிகம்  அதனால் ஸ்பெர்ம்களின் அளவு அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, தாம்பத்திய வாழக்கைக்கு  ஒரு சிறந்த உணவுப் பொருளும் கூட.
 தக்காளி  தக்காளி ஒரு சிறந்த பழம். அதிலும் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள லைக்கோபைன் என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். ஆகவே இதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்தால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...