|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2012

பார்த்ததில் பிடித்தது...


வதேரா எந்த தகுதியின் அடிப்படையில் இந்த பட்டியலில் இடம் பெற்றார் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்., சோனியாவின் மருமகன் என்ற ஒரு தகுதி இருக்கிறதே அது போதாதா?
ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது. வேலையின்மையின் பிடி யில் தமிழகம் நாளுக்குநாள் சிக்கித் தவித்துக் கொண்டி ருக்கும் போதும், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நலிவ டைந்து வரும் சூழலில் தமி ழக அரசின் இந்த நடவ டிக்கை வன்மையான கண்ட னத்திற்குரியது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின மாநிலச் செய லாளர்கள் இரா.வேல் முருகன், ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.மதவெறியர்களின் சுயநல அரசியலுக்குப் பணிந்து சேதுத் திட்டத்தை முடக்காதே...! தமிழக அரசுக்கு இளைஞர்கள், மாணவர்கள் வற்புறுத்தல்...!! தமிழக இளைஞர்களின் கனவுத்திட்டமாம் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்காதே என வாலிபர் - மாணவர் சங்கங்கள் எச்ச ரித்துள்ளன.தமிழகத்தின் 150 ஆண்டு கனவுதிட்டமான சேது சமுத்திரத்திட்டத்தினை தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது எரி யும் நெருப்பில் எண்

தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாட்டின் அற்புத கொடையான நீண்ட கடற் கரையோரங்களில் அள வில்லா கனிம வளங்களை யும், ஆதாரங்களையும் கொண் டுள்ள பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை உரு வாக்க வேண்டும் என்றால் கூட போக்குவரத்திற்கு எளி தாக சென்று வரக்கூடிய நீர்வழித்தட ஆதாரங்களை அதிகப்படுத்த வேண்டியுள் ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 90 லட்சத் திற்கும் மேற்பட்ட இளை ஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்பையும், கடலோர மாவட்டங்களின் கனிம வள ஆதாரத்தின் மூலம் துவங்கப்படும் புதிய தொழிற் சாலைகளையும், தென்தமி ழகத்தின் வளர்சசியையும் குழி தோண்டி புதைக்கும் ஏற்பாட்டையே தமிழக அதிமுக அரசு செய்துள் ளது என அவர்கள் சாடி யுள்ளனர்.மின்வெட்டால் ஒட்டு மொத்த தமிழகமும் தினந் தோறும் இருளில் திண் டாடிக்கொண்டும், தொழிற் சாலைகள் ஒருபுறமும், விவ சாய பம்ப்செட்கள் மறு புறம் இயங்காமல் அனைத்து உற்பத்தியும் தேங்கி கொண்டு கடும் நெருக்கடி யில் சிக்கிதவிக்கிறது. மறு புறம் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின்சாரத்தை உற் பத்தி செய்துவிடுவோம் என்று தகவலை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். இன் றும் அதிகளவு நிலக்கரி கப் பல் மூலமே பெறப்படு கிறது. இப்படிப்பட்ட நிலை யில் இந்த கப்பல் வழி போக்குவரத்திற்கு உதவி யான சேது சமுத்திரத் திட் டத்தை முடக்குவது தமிழ கத்தின் மின்வெட்டை நீட் டிக்கும் செயலாகவே கருத முடியும். புவி வெப்பமயமாக்கல், காடுகள் அழிப்பு, பசுமை ஒழிப்பு என நாள்தோறும் இயற்கைக்கு விரோதமாக எண்ணற்ற நடவடிக்கை களில் கார்ப்பரேட் நிறுவனங் களை ஈடுபட அனுமதிக் கும் அரசுகள், எந்த பாதிப் பும் இல்லாமல் சேதுசமுத் திரத்திட்டதை நடைமுறைப் படுத்த முடியும் என பல் வேறு நிபுணர்குழுக்கள் தெரிவித்து, அதற்காக மக் களின் வரிப்பணம் ஆயிரக் கணக்கான கோடி செல விடப்பட்ட நிலையில் மத வெறியர்களின் சுயநல அர சியலுக்காக தமிழக அதிமுக அரசும் பணிந்து, இன்று இந்த திட்டம் தேவை யில்லை என்பது ஓட்டுப் போட்ட மக்களை முட் டாள்கள் ஆக்கும் நடவ டிக்கையே ஆகும். அதிமுக கடந்த காலங் களில் சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கிட வேண்டும் என பல முறை பேசிவிட்டு இன்று மதவெறி யர்களின் கருத்துக்களோடு இணைந்து பேசுவது, இந்திய அரசியல் சாசனத்தின் மைய மான மதச்சார்பற்ற தன்மை என்பதற்கு வேட்டுவைக்கும் அபாயத்தை உருவாக்கும் செயலாகவே அமையும். எனவே தமிழக அதிமுக அரசு மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு விரோத மாக மணல்திட்டு என நிரூ பணம் ஆன ஒன்றை நம்பிக் கையின் பெயரால் இராமர் பாலம் என்று சொல்லி சேது சமுத்திரத்திட்டத்தை முடக்க நினைப்பது அர சின் அப்பட்டமான பிற்போக் குத் தனத்தையே காண்பிக் கிறது. ஆகவே உடன் சேது சமுத்திரத்திட்ட பணிகளை விரைந்து செய்திட உரிய நடவடிக்கை எடு, முட்டுக் கட்டை போடாதே என தமி ழக அரசை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர்.






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...