இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) இன்று தடை விதித்தது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,) நாளை தேர்தல்
நடக்கவுள்ளது. இதற்கு முன், தலைவர், துணைத் தலைவர், பொருளாளராக அபய் சிங்
சவுதாலா, வீரேந்திர நானாவதி, ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியின்றி
தேர்வாகினர். பொதுச்செயலராக காமன்வெல்த் ஊழலில் சிக்கி, சிறை சென்ற லலித்
பனோட் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊழல் கறை படிந்த கல்மாடி,
வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோர் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடக்
கூடாது என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) எச்சரித்தது. தேர்தலை
ஐ.ஒ.சி., விதிப்படி நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், ஐ.ஒ.ஏ.,யை
தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும்
எச்சரித்தது.
இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் லாசனேயில் ஐ.ஒ.சி.,யின் தலைமை
அதிகாரிகள் கூட்டம் துவங்கியது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின்
விதிகளை ஏற்காத, காரணத்தினாலும், அருசின் தலையீடு காரணமாகவும் இந்திய
ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக இந்திய
வீரர்கள் இந்திய கொடியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது தடை
செய்யப்படும் எனவும், இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நிதியுதவி
ஏதும் வழங்காது என கூறப்படுகிறது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச
ஒலிம்பிக் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்க
அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே ஈராக், குவைத் மற்றும்
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளது.
தடை எதிர்பாராதது: மத்திய அரசு : இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து , தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த தடை, விளையாட்டுத்துறைக்கு எதிர்பாராதது என்றும், ஐ.ஓ.ஏ., தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஐ.ஓ.சி.,க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதற்கு பதில் கிடைக்கவில்லை
No comments:
Post a Comment