ஆந்திர மாநிலம் . ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நார்வேயில்
சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு
வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.சமீபத்தில் இவர்களது மகன்,
பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக
சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை
எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று
செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என,
மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம்
தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக
ஆசிரியை, போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆஸ்லோ கோர்ட் மகனை கொடுமை படுத்தியதாக தந்தை
சந்திரசேகருக்கு 18 மாத சிறையும் , தாயார் ணஅநுபமாவுக்கு 15 மாத சிறையும்
விதித்து தீர்ப்பளித்தார்.நார்வே அரசின் சட்ட திட்டங்கள் விஷயத்தி்ல் மத்திய அரசு தலையிட முடியாது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கை விரித்து விட்டது
No comments:
Post a Comment