இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். கப்பல் துறையின் பணிகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முன்னோடியாக உள்ளது. கப்பல் துறையில் பணிபுரிவோர், பெரும்பாலும் கடல் பகுதியிலேயே இருக்க வேண்டும். இதனால் இவர்களது பணி, மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. கப்பல்துறை தொடர்பான கல்லூரிகளில் மாணவர்கள், இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் தயங்காமல் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.
எவ்வழி போக்குவரத்து அதிகம்: உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ.,. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா ) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி சார்பில் எஸ்.எஸ்.லாயலிட்டி என்ற கப்பல், பிரிட்டனுக்கு முதல் பயணத்தைத் துவக்கி வரலாறு படைக்கப்பட்டது. 1964 ஏப்., 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.
ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம், மும்பையிலிருந்து லண்டனுக்கு, முதல் இந்திய கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி பயணம் மேற்கொண்ட ஏப்., 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு தெரிய செய்வதே இந்த கடல்சார் தின கொண்டாட்டத்தின் நோக்கமாகும். கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஒருவார கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும், துறைமுகங்களிலும் நாட்டின் கடல் எல்லையிலும் அமைதியாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லும் இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக் குறைவான மக்களே அறிந்துள்ளனர். கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மும்பை, கோல்கட்டா, சென்னை,கோவா,விசாகப்பட்டினம், கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களிலும் கண்ட்லா, ஜாம்நகர், பாரதீப், மங்களூர், தூத்துக்குடி, கார்வர் உள்ளிட்ட இதர துறைமுகங்களிலும் கடல்சார் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.
No comments:
Post a Comment