|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2013

முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)


இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் (1875)


பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு...


இந்தியாவை சேர்ந்த எழுத்தாளரான ஷாலு ஷர்மா  என்பவர் சமீபத்தில் 'இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்தி வார்த்தைகள்' ("Essential Words and Phrases for Travellers to India") என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அடிக்கடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயன்தரும் விதத்தில் அமைந்திருக்கிறது. நீங்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் செல்லுபடியாகாது. உதாரணமாக நீங்கள் மும்பை செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அங்கு டேக்ஸி டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பொன்றவர்களிடம் ஹிந்தியில்தான் பேச முடியும். அப்படி உங்களுக்கு ஹிந்தி தெரியாதபட்சத்தில் அவர்களுடன் சரியாக தொடர்புகொள்ள முடியாது என்பதோடு உங்களை அவர்கள் ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பயணிக்க தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் போன்றவற்றை அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்தி மொழி பேசப்படுவதோடு 60% இந்திய மக்கள் ஹிந்தி பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் டெல்லி, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ராஜாதான் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்தி பிரதான மொழியாக இருந்து வருகிறது.

வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம் 
வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி 
நான் - மே 
நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும் 
என்னுடையது - மேரா 
இது என்னுடையது - யே மேரா ஹே 
உங்களுடையது - ஆப்கா 
இது உங்களுடையதா? - கியா யே ஆப்கா ஹே? 
யார் - கௌன் 
நீங்கள் யார்? - ஆப் கௌன் ஹே? 
ஆடைகள் - கப்டா 
என் ஆடைகள் எங்கே? - மேரா கப்டா கஹா ஹே?
தேனீர் - சாய் 
எனக்கு ஒரு கப் தேனீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் கப் சாய் சாஹியே நீர் - பாணி 
எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் பாட்டில் பாணி சாஹியே 
உணவு - கானா
 உணவு தாருங்கள் - முஜ்ஜே கானா தோ 
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? - கியா ஆப் இங்கிலீஷ் போல்தே ஹே? மெதுவாக பேசுங்கள் - தீரே போலியே எப்படி இருக்கிறீர்கள்? - ஆப் கைசே ஹே நான் நலம் - மே டீக் ஹூம் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஆப் சே மில்கர் குஷி ஹூய்
உங்கள் பெயர் என்ன? - ஆப் கா நாம் கியா ஹே 
என் பெயர் வசந்த் - மேரா நாம் வசந்த் ஹே 
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - ஆப் கஹா சே ஹே
ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? - ரயில்வே ஸ்டேஷன் கஹா ஹே பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது? - ஸ்டாண்ட் கஹா ஹே 
நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா? - கியா ஆப் மேரி மதத் கரேங்கே 
இது என்ன? - யே கியா ஹே?
நான் இதை வாங்க விரும்பிகிறேன் - முஜே யே கரித்னா ஹே 
இது எவ்வளவு? - யே கித்னே கா ஹே? 
விலையை குறையுங்கள் (பேரம் பசுவது) - தாம் கம் கீஜியே ஆம் - ஹா இல்லை - நஹி 
தயவு செய்து - க்ருப்யா 
நன்றி - தன்யவாத் ஷாலு ஷர்மா எழுதியுள்ள இந்த 60 பக்க புத்தகம் ஹிந்தி மொழிக்கு ஒரு அறிமுகம் 

24 October, 2013

நாட்டின் நன்மைக்காக அமையும் அணியை வரவேற்பேன்: கருணாநிதி


ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் நினைவுக்கு வரல?

தங்க டாய்லெட் பேப்பர்

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.

‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு சாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து வீட்டுக்கே டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனைக்கு தயாரிக்கவில்லை.

துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை (டாய்லெட் சீட்) முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர் மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘அஷோக்' அக்டோபர் 31-ஆம் தேதி முதல்...

 
இதுவரை தீபாவளி ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுவந்து அஜித்தின் ’ஆரம்பம்’ திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி  ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘அஷோக்’ என்று தெரிகிறது. 

எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க?



நண்பர்களே! 500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் - விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம்!  எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ்ல வாங்குங்க மக்கா!அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக .. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது ! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம ! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க!பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை ! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதுவும் முக்கியமானதுதானே ! கண்ணில் பட்ட நல்ல விஷயத்தை நாலு பேர் மத்தியில் வைகோ கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்...

22 October, 2013

உறவுகளை அழைக்கிறது...

உரிமையுடன் உறவுகளை அழைக்கிறது -மே பதினேழு இயக்கம் இணைவோம் 25 இல்...இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இலங்கை செய்த இனப்படுகொலையை மறைக்க சதி வேலை பார்க்கும் இந்திய-இங்கிலாந்து அலுவலகங்களை முற்றுகையிடுவோம்,

பதில் சொல்லுங்கள்!


மனம் வலிக்குது ...

புரிஞ்சு போச்சு ...

சபரிமலைக்கு பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிப்பது கிடையாது என்று சொல்ல வருகிறார்கள் என்பது புரிஞ்சு போச்சு.

ஓரியோ பிஸ்கட் சாப்பிட்டா கோகைன் மாதிரி போதை வருமாம்!

 
 குழந்தைகளின் பிரிய பிஸ்கட் ஆகிவிட்டது ஓரியோ. இதற்கு அதிக அளவில் செய்யப்படும் விளம்பரம். கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

10 October, 2013

பப்ளிசிட்டிக்கு கருமத்துக்கு



படத்தோட டிரைலர் ரிலீஸ் ஆகி ஒரு மாமங்கம் ஆகிடுச்சு... ஆனா பாருங்க பயபுள்ள முந்தாநேத்துதான் அந்த தொப்புளை சாரி... டிரைலரை... பார்த்துச்சாம்... அது போலினு தெரிஞ்சிச்சாம். அதுக்கொசரம் கமிஷனர் ஆபீஸ்ல போயி கம்ப்ளைன்ட் வேற குடுத்துச்சாம்! உடனே படத்தோட இயக்குனர் வேற கிடந்து சலம்ப... இந்த அம்மணி அலம்ப.. எல்லா மீடியாலயும் இதே நியூஸுதான்..

ப்ப்பா...

படம் எப்பங்கண்ணா ரீலீஸ்னு பார்த்தா இந்த வார வெள்ளிக்கிழமையாம்...

அடடே ஆச்சர்யக்குறி!
ஒரு பப்ளிசிட்டிக்கு  கருமத்துக்கு  என்ன எழவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!எனக்கு தனுஷ்  சப்போட்டு வேறன்னு அந்தம்மா  பேட்டி வேற ஏன்னா ஏற்கனவே 2 படம் உத்திகிச்சு இந்த படமும் லிஸ்டுல சேர்த்துட கூடாதுல்ல  அதான். நையாண்டிக்கு நய்யாண்டின்னு போட்டு எந்த தமிழ் பண்டிட்டும் கண்டுகலைன்னு இந்த சேட்டை 

இதையெல்லாமா கண்காணிப்பாங்க.


எப்பூடி!

07 October, 2013

தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும்.


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர். 

பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே?   இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.

மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?
காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். 

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி..இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார். 

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே. 

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. 

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா? "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார். 

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே.. "ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார். கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா? அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன். 

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன? மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன். இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா? அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும். 

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்? தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.

உடைகளில் கண்ணியம் தேவை!


திருமலையில் பெருமாளை தரிசிக்க கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் பெர்மூடாஸ், ஜீன்ஸ்,டிசர்ட் என்று விருப்பப்படி உடையணிந்து செல்லமுடியாது.பாரம்பரிய உடையணிந்துதான் செல்லமுடியும்.அது என்ன மாதிரியான உடை என்பதை அறிவிக்கும் வகையில் திருமலையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இது எங்கள் கோயில் விதி!


மங்களூரில் உள்ள ஒரு கோயில் கருவறைக்குள் தினமும் 2 விதவை பெண்கள் பூஜைகள் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் கடந்த 5 ஆம் தேதியில் இருந்து தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மங்களூர் புத்ரோலியில் உள்ள புகழ் பெற்ற கோகர்னாதா கோவிலிலும் தசரா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தினமும் 2 விதவை பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று அங்குள்ள மூலவரான சிவ பெருமானுக்கு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பூ, தீர்த்தம், பிரசாதம் கொடுத்து வருகிறார்கள். இது கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தின்படி கணவனை இழந்த விதவை பெண்கள் சுப காரியங்களில் ஈடுபடுவது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் கோவிலுக்குள் தினமும் 2 விதவை பெண்கள் சென்று பூஜைகள் செய்து வருவது பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ஜனார்தன புஜாரி கூறுகையில், ''பெண்கள் தெய்வத்துக்கு நிகராணவர்கள், அவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.விதவை பெண்கள் மீதான மூட நம்பிக்கை முழுவதும் ஒழிந்து போக வேண்டும். இனி ஒவ்வொரு தினமும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு நாள் மட்டும் பயிற்சி எடுத்து கொண்டு கோயில் கருவறைக்குள் சென்று பூஜைகள் நடத்தலாம். இது எங்கள் கோயில் விதி" என்றார்.


05 October, 2013

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினி விருது கொடுத்திருப்பார்.

திரைப்பட நூற்றாண்டு விழாவில் ரஜினிக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தலைவரை அவ மானப்படுத்தியவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் கற் பிக்க ரஜினி மன்ற சீனியர் நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் இது சம்பந்தமாக விசா ரித்தோம்.ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பால.நமச்சிவாயத்திடம் பேசினோம். ''தலைவ​ருக்காகக் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தி​யவர்கள்தான் நாங்கள். ஏன் அவ ருக்காக உயிரையும் கொடுப்போம். இப்போது அவரைப்போலவே ரொம்ப பக்குவப்பட்டு விட்டோம். அன்றைக்கு திரைப்பட நூற்றாண்டு விழாவில் தலைவர் மட்டுமா அவமதிக்கப்பட்டார்? நாட்டின் ஜனாதிபதியே அவமதிக்கப்பட்டிருக்கிறார்.

பல சீனியர் கலைஞர்களையும், காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைக் கொடுத்தவர்களும் புறக் கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சினிமாவே தயாரிக்காத கேயாருக்கும், சூப்பர் ஸ்டார் உச்சத்தில் இருக்கும்போது திரைப்படத் துறைக்கு வந்த விக்ரமனுக்கும், சீனியர்களை பின்னுக்கு தள்ளுகிறோமே என்ற குற்ற உணர்வு இல்லை. 96-ம் ஆண்டு தேடிவந்த முதல்வர் பதவி வாய்ப்பை அப்போதே சூப்பர் ஸ்டார் ஏற்றுக்கொண்டிருந்தால், இதேவிழாவில் முன்னாள் கலைஞர்கள் என்ற அடிப்படையில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர் விருது கொடுத்திருப்பார்.மறுபடியும் காலம் வரும். அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும். இதைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதாலோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதாலோ அதுவும், இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால், இந்தநிலை இப்படியே தொடராது. வரும் தேர்தலில் ரஜினி ரசிகர்கள், இதற்கான பதிலைக் கொடுப்பதற்கு ஆலோசனைசெய்து வருகிறோம். இந்த ஆலோசனை விவரங்கள் தலைவர் கவனத்துக்குப் போய், அவர் ஒப்பு தலுடன் அடுத்த அதிரடி ஆரம்பமாகும்'' என்றார்.

ரஜினி ஒப்புதல் கொடுப்பாரா.... கண்களை மூடி கையை மேலே உயர்த்துவாரா?

03 October, 2013

Public Restroom.


அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை?


பூச்சிகள் இந்தியாவில் மிகப்பெரிய கொலையாளி இனங்களில் ஒன்று’
இப்படியொரு தலைப்புடன், வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்குள் பலத்த அதிர்ச்சி. அது, பூச்சிகளைக் கொல்லும் விஷத்தை தயாரித்து விற்கும் தனியார் நிறுவனத்தின் விளம்பரம்.அதில், கரப்பான் பூச்சிகளும், கொசுவும் இணைந்து மிகப்பெரிய சதி செய்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா... போன்ற நோய்களை பரப்புகின்றன. அதனால், அவற்றை ஓர் இயக்கமாக இருந்து அழிப்போம் வாருங்கள் என்று அழைக்கிறது அந்த விளம்பரம்.
 
ஒரு பொருளை விளம்பரம் செய்வது அவர்களின் உரிமை. அதற்காக ஒட்டுமொத்தமாக பூச்சி இனத்தையே கொலையாளிகள் என்று சொல்லி, மக்கள் மனதில் பயத்தைத் தோற்றுவிக்கும் விதத்தில் விளம்பரம் செய்வதுதான் அதிர வைக்கிறது.இங்கே மனிதர்கள் மட்டுமே ஜீவன்கள் இல்லை. அப்படி நாம் மட்டுமே இருந்தால், இங்கே நமக்கு வாழ்க்கையும் இல்லை. ஆம், மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லாமல் மண்புழு இருக்கும்... ஆனால், மண்புழு இல்லாமல் மனிதர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் மனிதர்கள் இல்லாமல் இந்த பூமியும் அதிலிருக்கும் அத்தனை ஜீவன்களும் வாழும். ஆனால், அவற்றில் ஒன்றிரண்டு இல்லாவிட்டாலும்கூட, ஒரு நொடியும் நம்மால் வாழவே முடியாது.

ஆம், அனைத்தையும் சார்ந்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தேவையுடன்தான் இங்கே உயிர்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன. மனிதனும் அப்படி ஒரு தேவையுடன்தான் இங்கே தோன்றியிருக்கக் கூடும். ஒருவேளை, அந்தத் தேவை, இந்தப் பூமியை ஒட்டுமொத்தமாக அழிப்பதாகக்கூட இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.ஏனென்றால், இன்றைக்கு அவன் செய்துகொண்டிருக்கும் வேலைகள் அனைத்தும் அப்படித்தானே. ஆம், கிட்டத்தட்ட பஞ்சபூதத்தையும் பஞ்சராக்கிவிட்டோமே! நிலத்தைக் கெடுத்தாகிவிட்டது, நீரைக் கெடுத்தாகிவிட்டது, காற்றைக் கெடுத்தாகிவிட்டது, ஆகாயத்தையும் கெடுத்தாகிவிட்டது... வரிசையாக செயற்கைகோள்களை அனுப்பி! எஞ்சியிருப்பது நெருப்பு மட்டுமே, அது நெருங்க முடியாத நிலையில் இருப்பதால் யோசித்துக் கொண்டிருக்கிறோம்... அவ்வளவே!
 
ம்... இந்த பூமிக்கு கட்டக்கடைசியாக வந்து சேர்ந்த இந்த மனிதன் ஆடும் இத்தனை ஆட்டங்களுக்கு, அவனுக்கு பல காலம் முன்பாகவே தோன்றிய அனைத்து உயிர்கள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் என்று அத்தனையும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் இந்த பூச்சிகள். தேனீக்கள் இல்லாமல் மகரந்த சேர்க்கைகள் நடக்குமா? 'இகோலி'கள் இல்லாமல், உயிரினங்கள் வெளியே தள்ளும் கழிவுகள் சிதையுமா? கரையான்கள் இல்லாமல், காய்ந்து போன மரம் மட்டைகள் மட்குமா? கரப்பான் பூச்சிகள், டைனோசர் காலத்திலிருந்தே இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கரப்பான் பூச்சிக்கு இடப்பட்டிருக்கும் வேலை, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்குவதுதான். குறிப்பாக, அவை ஏன் சமையலறையில் அதிகமாக இருக்கின்றன. நாம் அந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தூய்மையாக இருந்தால், அவற்றுக்கு இயல்பாகவே அங்கே வேலையிருக்காது... வேறு இடம் தேடிச் சென்று விடும். 
 
அதேபோல, கொசுக்களின் தேவை... தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் தவளை இன குஞ்சுகளான தலைப்பிரட்டைகளுக்கு உணவு என்பதுதான். தண்ணீரில் கெமிக்கல் கழிவுகளைக் கொட்டிக் கொட்டி அசுத்தப்படுத்தி விட்டோம். தவளைகள் வாழ வழியில்லாத நிலையில், கொசுக்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. அவை நோய் பரப்பும் காரணிகளாகவும் மாறிவிட்டன. கொசுக்களுக்கு கூடுதல் வசதியாக வீடுதோறும் தண்ணீர் தேங்கும் வகையில், குப்பைகள் தேவையற்ற பாத்திரங்கள் என்று போட்டு வைத்திருக்கிறோம். கழிவு நீர் ஓடைகளையும், வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருந்தால்... கொசுக்கள் போயே போச்சு! செய்ய வேண்டியதையெல்லாம் செய்யத் தவறிவிட்டு, இந்த ஜீவன்களை ஓழிக்கிறேன் என்று சொல்லி, விஷத்தைத் தெளிக்கிறோம்.... அது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம் என்று தெரியாமலே! ஆம் இப்படி வயல்காடுகளில் 'பூச்சிமருந்து' என்கிற பெயரில் நெல், காய்கறி என்று பயிர்களின் மீது தெளிக்கப்படும் விஷம்தான் இன்றைக்கு பலவிதமான நோய்களுக்கு காரணமாகி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க... வீட்டுக்குள்ளேயே விஷத்தை கண்மூடித்தனமாக தெளித்துக் கொண்டிருந்தால்?

'அதற்காக பாம்பு கடிக்கும்போது... வேடிக்கை பார்க்க வேண்டுமா... தேள் கடிக்கும்போது கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா?' என்று ஒரு கேள்வி வந்து விழுகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து அல்லது வேட்டையாடி வாழும் வாழ்க்கைதான் இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது. அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் அவா. எந்த பாம்பும், தேளும் தேவையில்லாமல் தன்னுடைய விஷத்தை வீணடிப்பதில்லை. அதேபோல இயற்கைக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுவதில்லை.தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவைதான் அத்தனை ஜீவன்களும்.... மனிதனைத்தவிர. நாம், இன்னும் எழுபத்தைந்து தலைமுறைக்கு அப்புறம் வரப்போகும் நம் சந்ததிக்கு கூட அல்லவா சொத்து சேர்க்க ஆசைப்படுகிறோம்! தேவையென்றால், ஒட்டுமொத்தமாக ஒரு தோப்பையே அழிப்போம்... மலையையே தூள் தூளாக்குவோம்... ஆறுகளை கபளீகரம் செய்வோம்... யானைகளை வேட்டையாடுவோம்... இப்படி செய்கின்ற தவறுகளையெல்லாம் நம் பக்கமே வைத்துக் கொண்டு... 'கொலையாளிகள்' என்று 'அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை கொடுப்பது நியாயம்தானா?


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...