|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2012

அடப்பாவிங்களா யாருக்கு மறை கலண்டது?


நாடு எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தத் தடை குறித்து சற்றும் கவலைப்படாமல், சங்கோஜப்படாமல், ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடித்து காக்டெய்ல் பார்ட்டி வைத்து அதைக் கொண்டாடியும் முடித்துள்ளனர் புதிய நிர்வாகிகள். அந்த பார்ட்டியில் சுரேஷ் கல்மாடியும் கலந்து கொண்டார்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல், மத்திய விளையாட்டுத்துறையின் விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.

இது இந்திய விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா விளையாட முடியாதபடி தடைகள் வரப் போவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் திட்டமிட்டபடி இந்திய ஒலிம்பிக் சங்கம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. புதிய தலைவராக அபய் சிங் செளதாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தேர்தலை முடித்த கையோடு டெல்லி இம்பீரியல் ஹோட்டலில் நேற்று ராத்திரி விடிய விடிய விருந்து வைத்து களேபரப்படுத்தியுள்ளனர் சங்க நிர்வாகிகள். பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியில் மது விருந்தும், இரவு விருந்தும் அடக்கம். விருந்துக்கு வந்தவர்களில் முக்கியமானவர் காமன்வெல்த் போட்டி ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி. புதிய தலைவர் செளதாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஊத்தி மூடினாலும்  விடிய, விடிய ஊத்தி ஆட்டம் போட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்.நாடு எக்கேடு கெட்டால் இவனுகளுக்கு என்ன? வாழ்க பாரதம்!

நிர்வாண பெண்ணின் உடலில்!


மியாமியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜப்பானிய வகை உணவுகளை வித்தியாசமான முறையில் கொடுக்கிறார்கள். அதாவது நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உடலில் உணவுகளை வைத்து அதை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்கள்.அதாவது தட்டுக்குப் பதில் ஒரு பெண் நிர்வாணமாக படுத்திருப்பார். அவர் மீது உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த உணவை நமக்குத் தருவார்கள். நாம் பெண்ணின் உடலிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும்.குங்பூ கிச்சன் மற்றும் சுஷி ஆகிய இரு ஹோட்டல்களும் மியாமி கடற்கரைப் பகுதியில் உள்ளன. இங்குதான் இந்த வித்தியாசமான உணவுப் பரிமாறல் நடக்கிறது. கடந்த மாதம் முதல் நிர்வாணப் பெண்களின் உடல் மீது உணவுகளை வைத்து வழங்குவதை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து அந்த உணவகத்தின் தலைமைச் சமையலர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாணப் பெண்ணின் உடலில் உணவுகளை வைத்துப் பரிமாறுவதை, சாப்பிடுவதை ஜப்பானியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இது ஜப்பானியர்களின் பாரம்பரியம் என்று கூறினார்.ஒரு பெண்ணின் உடலில் வைக்கப்படும் உணவை 15 பேர் வரை சாப்பிடலாம். இந்த உணவுக்கான கட்டணம் 500 டாலர்களாகும்.

ஊழல்கள் மலிந்த நாடு!

உலக அளவில் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது ரேங்க் கிடைத்துள்ளது. உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து, டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது.
 
கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில், நியூசிலாந்தும், பின்லாந்தும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36வது இடத்திலும், தொடர்ந்து சீனா 39வது இடத்திலும், பாகிஸ்தான் 27வது இடத்திலும் உள்ளன.

வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஊழல் உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் இப்போதும் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் தெரிவித்துள்ளார். பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளான வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது.

எங்கும் எதிலும் ஊழல் அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் டி.ஐ.ஐ அமைப்பு 2003 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஊழல்கள் மலிந்த நாடுகளைக் கண்டறிந்து ரேங்க் கொடுத்து அதை வெளியிட்டு வருகிறது. இதில் ஊழல் மலிவுச் சுட்டெண் என்பது உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது.
 

04 December, 2012

Pizza Tamil full Movie Online


Zero Kilometers Comedy Short Film


வேதனை!

ஆந்திர மாநிலம் . ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நார்வேயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆஸ்லோ கோர்ட் மகனை கொடுமை படுத்தியதாக தந்தை சந்திரசேகருக்கு 18 மாத சிறையும் , தாயார் ணஅநுபமாவுக்கு 15 மாத சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.நார்வே அரசின் சட்ட திட்டங்கள் விஷயத்தி்ல் மத்திய அரசு தலையிட முடியாது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கை விரித்து விட்டது

தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர்.

ஊழல் கறை படிந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தடை!

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) இன்று தடை விதித்தது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,) நாளை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு முன், தலைவர், துணைத் தலைவர், பொருளாளராக அபய் சிங் சவுதாலா, வீரேந்திர நானாவதி, ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். பொதுச்செயலராக காமன்வெல்த் ஊழலில் சிக்கி, சிறை சென்ற லலித் பனோட் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊழல் கறை படிந்த கல்மாடி, வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோர் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) எச்சரித்தது. தேர்தலை ஐ.ஒ.சி., விதிப்படி நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், ஐ.ஒ.ஏ.,யை தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் லாசனேயில் ஐ.ஒ.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டம் துவங்கியது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிகளை ஏற்காத, காரணத்தினாலும், அருசின் தலையீடு காரணமாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக இந்திய வீரர்கள் இந்திய கொடியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது தடை செய்யப்படும் எனவும், இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நிதியுதவி ஏதும் வழங்காது என கூறப்படுகிறது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே ஈராக், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தடை எதிர்பாராதது: மத்திய அரசு : இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து , தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த தடை, விளையாட்டுத்துறைக்கு எதிர்பாராதது என்றும், ஐ.ஓ.ஏ., தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஐ.ஓ.சி.,க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதற்கு பதில் கிடைக்கவில்லை

பார்த்ததில் பிடித்தது!

இல்லாதை இருப்பதாகவே சொல்வது தான் தினமலம்.

03 December, 2012

Ammavin Kaipesi Movie Online HD


thuppakki full movie.


Scary Corpse Elevator...


அனுபவமே ஒருவனுக்கு நல்ல பாடத்தை கற்றுத்தருகிறது! இனி இப்படியும் முயற்சிக்கலாம்.


கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா?


யாழ் பல்கலை மாணவர்கள் கைதுக்கு யு.எஸ். கண்டனம்: ஆனால், இந்தியா அமைதி? இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில் வன்மையான கண்டனத்தை ராஜபக்ஷேயின் சிங்கள அரசுக்கு தெரிவித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்  கருணாநிதி! கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா? எல்லா விசயத்திலும் பணம் பணம் என பணத்தாசை பிடித்தாட்டும் பிணம் தின்னும் பேய்கள் எது சொன்னாலும் செய்தாலும் அரசியல் அரசியல்! பாவம் பாமரன்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தனது விடா முயற்சியால் சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.  பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.
ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை  தொடர்புகொள்ளலாம்.

உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277
இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். இந்த தினத்தில் உதயக்குமார் போன்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்.

நாதஸ்வரம். 03 .12. 12

கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரே நாராயண இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா அது மாதிரி (டெய்லி மோசன்) Format தாங்க முடியல அதான் உங்களுக்காக நாதஸ்வரம்.

கையெழுத்தை சரியாக போடாமல்?

காசோலையில் கையெழுத்தை சரியாக போடாமல் திரும்பி வந்தால் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பிருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.காசோலையில் கையெழுத்தை தவறாக போட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர், கியான்சுதா, காசோலைகளில் கையெழுத்தை பலர் சரியாக போடாததும் குற்றம்தான். அக்கவுண்ட்டில் பணம் இல்லாமல் காசோலை திரும்புவது எப்படி குற்றமோ அந்த அளவுக்கு கையெழுத்து சரி இல்லாததும் குற்றமே.இது சட்டப் பிரிவு 138-ன் கீழ் தண்டனைக்குரியது. இந்தப் பிரிவின் கீழ் தவறாக கையெழுத்திட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். மேலும் காசோலை தொகையைப் போல 2 மடங்கு அபராதமும் விதிக்கலாம்.

குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் !

எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர் நீல் பாப்வொர்த்(22) என்பவர் தனது ஆர்பிடெல் 901 செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அது தான் உலகில் முதன்முதலாக அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். ஆகும்.ஆனால் வியாபார ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம் ஆண்டு ஸ்வீடனில் துவங்கியது. அதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ். சேவை துவங்கியது. தொடர்ந்து 1994ம் ஆண்டு எஸ்.எம்.எஸ். சேவையுடன் கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...