4வது அணு உலை வெடித்தது;
பெருமளவு கதிர்வீச்சை உறுதி
செய்த ஜப்பான்!
ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு
உலையின் நான்காவது உலையில்
ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில
நிமிடங்களுக்கு முன் பெரும்
சத்தத்துடன் அது வெடித்தது.
இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.
முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.
இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment