|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 June, 2011

கனடாவில் விபசாரம் செய்வது தடையா?


கனடாவில் விபசாரத்தை குற்றமற்றசெயல் எனப் சொல்லப்படும்  வகையிலான வழக்கொன்று தற்போது ஒன்ராறியோ மேன்முறையீட்டு மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. கனடாவின் பாலியல் வர்த்தகத்துறை இந்த வழக்கின் தீர்ப்பை இவ்வாரம் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து நாட்டின் ஏனைய மாநிலங்களிலும் இந்த நிலை, அதாவது விபசாரத்தை குற்றமற்ற செயல் எனப் பிரகடனம் செய்யும் நிலை ஏற்படலாம் என்பதே இந்த எதிர்ப்பார்ப்புக்குக் காரணமாகும். ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சபை
யின் முன்னால் இந்த விசாரணைகள் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு இடம்பெறவுள்ளன.

கனடாவில் விபசாரத்துக்கான தொடர்புகளை மேற்கொள்ளல், விபச்சாரத்தில் தங்கியிருத்தல், விபசார விடுதி ஒன்றை நடத்துதல் என்பனவற்றைக் குற்றச் செயல்களாக்கும் வகையில் கடந்தாண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவே இந்த மேல்  முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு அனுமதிப்பதன் மூலம் அந்தத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றனரா? அவர்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் பாதிக்கப்படுகின்றதா? மேலும் இது கனடாவின் உரிமை சாசனத்தை மீறுகின்றதா? என்பன போன்ற சுவாரஸ்யமான விவாதங்கள் வாதப்பிரதி வாதங்களாக இந்த விசாரணையின்போது முன் வைக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...