|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 June, 2011

அமைதி நோபலுக்கு கவுகாத்தி பேராயர் பெயர் பரிந்துரை!

உள்ளூரில் வெவ்வேறு சமூகத்துக்கு இடையிலான மோதல்கள் களைவதில் பெரும்பங்காற்றியதற்காக அமைதி நோபல் பரிசுக்கு, கவுகாத்தி பேராயர் தாமஸ் மேனாம்பரம்பில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் பிரபல பத்திரிகை இதழான 'இல் புல்லட்டினோ சேல்சியானோ' அமைதி நோபல் கமிட்டிக்கு இவரது பெயரை பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான கட்டுரை, அந்த இதழின் ஜூன் மாத பிரதியில் வெளிவந்துள்ளது. 

"அமைதிக்கான நடவடிக்கைகளே முக்கியம் தவிர, விருதுகளை பெரிதாகக் கருதவில்லை. அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன். சமூகத்தில் அமைதி நிலவ ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்," என்றார் பேராயர் தாமஸ். கடந்த 15 ஆண்டுகளாக கவுகாத்தி பகுதிகளில் வெவ்வேறு பிரிவனர்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு சமாதன பேச்சுவார்த்தைகள் மூலம் இவர் தீர்வு கண்டுள்ளார். கேரளாவின் கோட்டயம் மவட்டத்தில் பிறந்த தாமஸ் (வயது 74), கவுகாத்தியில் 1995-ம் ஆண்டு பேராயர் ஆனார்.

பொது வாழ்க்கையில் அமைதியை குலைக்கும் பிரச்னைகளைக் களைவது தொடர்பாக 'சென்ஸ் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி' என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...