சர்வதேச போர் விதிமுறைகளை மீறி செயல்பட்ட
இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா மன்றம் போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவரை
கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும்.
தமிழீழத்தை
தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி
சார்பில் 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
ஜூலை 15 முதல் 31 வரை நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியும்,
புதுச்சேரியில் அமைப்பு செயலாளர் சு.பாவணனும் தொடக்கி வைத்திருந்தனர். காரைக்காலில் மாநில செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
கட்சியின்
துணை பொதுச் செயலாளர் அரசு.வணங்காமுடி, ம.தி.மு.க சார்பில் மாவட்ட
செயலாளர் சோ.அம்பலவாணன், செல்லாப்பா, த.மு.மு.க சார்பில் மாவட்ட செயலாளர்
ஐ.அப்துல்ரஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து
காரைக்காலில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடமிருந்து
கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment