நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனப்பகுதியில் அரிய வகை பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரேஞ்சர் தேவசாகயம் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் அடர்ந்த வனப்பதியான தேக்காடு பகுதியில் சென்றபோது 6 அடி நீளம் கொண்ட அதிசயமான பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சில மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் அதனை உயிருடன் பிடித்தனர். இதனை ஆய்வு செய்தபோது அந்த பாம்பு மவுண்டேன் பிரிங்கட் ரகத்தை சேர்ந்தது இவை எதிரிகளை தாக்கும்போது உடம்பை சுறுட்டி வைத்துக்கொள்ளும். திடீரென 3 அடி உரயத்திற்கு சரேளென பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிப்பகுதியில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே வசிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment