அரசு பள்ளிக் கூடங்களை பராமரிப்பது தனி பணி. அனைத்து வகுப்பறைகளையும்
பூட்டி சாவி ஆயாவிடம் இருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பே ஆயா வந்து
வகுப்பறைகளை திறந்து சுத்தம் செய்து வைத்திருப்பார். தலைமை ஆசிரியர் அறை
மட்டும் பூட்டி சாவியும், தலைமை ஆசிரியரிடமே பாதுகாப்பாக இருக்கும். ஏதோ
அவசர வேலை காரணமாக வர இயலாவிட்டால் சாவியை வேறு யாரிடமாவது கொடுத்து
பள்ளியை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
ஆனால்
திருவண்ணா மலை மாவட்டம் பெருங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
பராமரிப்பில் தலைமை ஆசிரியர் தலையீடு சற்று வித்தியாசமானது. இந்த பள்ளியில்
500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியராக
குப்புசாமி உள்ளார்.
தினமும் மாலையில்
பள்ளிமுடிந்துதம் அனைத்து வகுப்பறைகளும் பூட்டப் பட்டு அதன் சாவிகள் தலைமை
ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படும். அதை வாங்கி தலைமை ஆசிரியர் தனது அறையில்
வைத்து பூட்டி சாவியை எடுத்து சென்று விடுவார். காலையில் அவர் வந்த பிறகு
தான் வகுப்பறைகள் திறக்க முடியும்.
நேற்று
முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் அனைத்து வகுப்பறைகளும் பூட்டப்பட்டு
சாவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது அறையில் வைத்து
பூட்டி விட்டு தலைமை ஆசிரியர் அறை சாவியை எடுத்து சென்று விட்டார்.
நேற்று
காலை வழக்கம் போல அனைத்து மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளி
திறக்கப்படவில்லை. தலைமை ஆசிரியர் வந்தால் தான் பள்ளியை திறக்க முடியும்
என்ற நிலை இருந்தது. அதனால் தலைமை ஆசிரியர் வருகையை அனைவரும்
எதிர்பார்த்திருந்தனர். ஏதோ காரணத்தால் பகல் 11 மணி ஆகியும் அவர் வரவில்லை,
போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.
இதனால்
அனைத்து மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு வெளியே நிற்று கொண்டிருந்தனர். இது
பற்றிய தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அங்கு குவிந்தனர். வெகு நேரமாகியும்
தலைமை ஆசிரியர் வரததாலும், பள்ளி திறக்கப் படாததாலும் ஆத்திரம் அடைந்த
பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் பள்ளியை முற்றுகையிட்டனர்.மறியல் செய்யப்
போவதாகவும் கூறினர்.
இது பற்றிய தகவல் போலீஸ்
இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று
சமாதானம் செய்தனர். அதற்கு கல்வி அதிகாரி வந்தால்தான் கலைந்து செல்வோம்
என்று கூறிவிட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
எஸ.சுகன்யா விரைந்து சென்றார். அவர் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து
வகுப்பறை சாவிகளை எடுத்து வகுப்பறைகளை திறக்க உத்தர விட்டார். அதன்படி
தலைமை ஆசிரியரின் அறை பூட்டு உடைக்கப்பட்டு மற்ற அறைகள் திறக்கப்பட்டது.
அதைத்
தொடர்ந்து மாணவ- மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.எந்தவித தகவலும்
தெரிவிக்காமலும், விடுமுறை எடுக்காமலும், பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர்
மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர்
சுகன்யா தெரிவித்தார். மாலையில் தலைமை ஆசிரியர் குப்புசாமியை, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment