கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில்
2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள ஒலி-ஒளி காட்சி கூடத்தில் மின்
விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி
கழகம் சார்பில், மதுரை மஹாலில் ஒலி-ஒளி காட்சி கூடம் இருப்பது போல்
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் அமைக்கப்படுகிறது.
சுவாமி
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில்,
புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம்
அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், சொத்தவிளை கடற்கரை போன்ற சுற்றுலா
தலங்களை பற்றி கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து சுற்றுலாபயணிகளும் அறியும்
வகையில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்படுகிறது.
மாலை, 6 மணிக்கு
துவங்கும் இந்த ஒலி-ஒளி காட்சிகள் தினமும், 2 காட்சிகளாக நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில்
கடற்கரையை ஒட்டியுள்ள இடத்தில் 200 பேர் அமரும் வகையில் காலரி
அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெனரேட்டர் அறை, புரெஜக்டர் அறை,
கம்ப்யூட்டர் சாதனம் காமிரா போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ள இந்த
ஒலி-ஒளி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பணி நடந்து வருகிறது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த காட்சி கூடம் அமைக்கப்பட்டு,
இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த சுற்றுலாத்துறை முயன்று வருகிறது.
No comments:
Post a Comment