|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

இந்தியாவுடனான தடையற்ற வாணிபம் கைவிடப்படும் ஐரோப்பிய யூனியன்!

தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்வோம் என்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

 வாணிப ஒப்பந்தத்தில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் கருத்தொற்றுமை ஏற்படாததை அடுத்து ஐரோப்பிய யூனியன் இவ்வாறு கூறியுள்ளது.  ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த வாணிப ஒப்பந்தப் பேச்சு முறிந்தால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

 
தில்லியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக 2012- பிப்ரவரிக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா இறுதி முடிவு எடுக்காவிட்டால், இந்த ஒப்பந்தம் பொது விவாதத்துக்கு வரும். இது தொடர்பாக இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
27 நாடுகள் உள்ள ஐரோப்பிய யூனியனில் டென்மார்க் மட்டுமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய யூனியன் வர்த்தகப் பிரிவு ஆணையர் கார்ல் டி குசட், "மலையளவில் சிக்கல் எழுவதால் இந்தியாவுடன் தடையற்ற வாணிப ஒப்பந்த பேச்சை நிறுத்திக் கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்' என்றார்.  முக்கியமாக கார், ஒயின் உள்ளிட்ட பானங்கள், பல்வேறு சேவைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சு நடைபெற்று வந்தது.  இரு தரப்பு வர்த்தகத்தை 2015-ல் ஆண்டுக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் கோடி வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. 2010-ல் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...