சீனாவின் ஆர்டோஸ்
நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப்
துணை முதல்வர் சுக்பீர் சிங் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஹாக்கி அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என சுக்பீர் சி்ங் அறிவித்துள்ளார். வீரர்களுக்கு போதிய தொகையை பரிசாக அளிக்காததற்கு மத்திய அரசு ஹாக்கி அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார்.
மத்திய அரசு தலா ரூ 1.5 லட்சம் பரிசு: இதற்கிடையே, வீரர்களின் உணர்வைப் புரிந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1.5 லட்சம் பரிசாக அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கான் கூறுகையில், "இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ 25000 பரிசை அறிவித்தது மத்திய அரசல்ல. எனவே தவறு ஹாக்கி இந்தியா அமைப்புடையதுதான். மத்திய அரசு ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ 1.5 லட்சம் பரிசளிக்கிறது," என்றார்.

No comments:
Post a Comment