மதுரை அருகே வேலம்மாள் வில்லேஜ் அமைக்க நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கில்
வேலம்மாள் கல்வி நிறுவன அதிபர் முத்துராமலிங்கம் தலைமறைவாகியுள்ளார். வேலம்மாள்
பள்ளிகள், கல்லூரிகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. முதலில் சென்னையில்
ஒரு குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட வேலம்மாள் பள்ளி இன்று பலமாடி
கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. இது தவிர கல்லூரிகளும் உள்ளன.
தமிழகத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த கல்வி நிறுவனங்களின் நிறுவன அதிபர் முத்துராமலிங்கம். அவர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து இன்று பெரிய பணக்காரராக உள்ளார். இந்நிலையில் மதுரை அருகே வேலம்மாள் வில்லேஜ் அமைக்க நிலத்தை மிரட்டி வாங்கியதாக முத்துராமலிங்கம், அவரது பொறியாளர் விஜய் ஆனந்த், பி.ஆர்.ஓ. திருப்பதி வெங்கடேஷ் ஆகியோர் மீது சமையாள் என்ற பெண் மதுரை போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் விஜய் ஆனந்த், திருப்பதி வெங்கடேஷ், மேலாளர் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் முத்துராமலிங்கம் தலைமறைவாகிவிட்டார்.

No comments:
Post a Comment