நினைவுத்திறன் என்பது மனிதர்களுக்கு அவசியமானது. ஞாபகசக்தி குறைந்தால்
எண்ணற்ற இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்களின்
நினைவுத்திறனுக்கும் ஆரோக்கியத்திற்கும் அசுவகந்தி என்னும் மூலிகைத்தாவரம்
முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மிதவெப்ப மண்டல வறண்ட இடங்களில் அசுவகந்தா
காணப்படுகிறது. மருத்துவப் பயன்கருதி இது தோட்டங்களிலும்
வளர்க்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: அசுவகந்தி மிக முக்கியமான மருந்து தாவரமாகும். இதன் உறுப்புகளில் இருந்து புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வித்தாபெரின், வித்தானோன், வித்தனோலைடு, சோம்னிடோல், வித்தாசோமினி பெரின், நிகோடைன், டிரோபைன் போன்றவை காணப்படுகின்றன.
நுரையீரல் நோய்க்கு மருந்து: இதன் இலைகள், வேர், கனி மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல்பூச்சாக சொறி, வலியுடைய வீக்கங்கள், மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்கும் வேர்: அசுவகந்தாவின் வேர் வலுவேற்றுவியாக செயல்படுகிறது. இது இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியினை ஊக்குவித்து மறதியை போக்கும். மூப்பு பலவீனத்தை போக்கும். இதன் கசாயத்தில் பால் அல்லது நெய் சேர்த்து கொதிக்க வைத்த தயாரிப்பு ஊட்டத்தினை அதிகரிக்கும். முதுகுவலி மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது.
வேரின் மருந்து உடல் உறுப்புகளின் செயலியல் மாற்றங்களைச் சரிப்படுத்துகிறது. இவை பால் உணர்வு ஊக்குவி, தாய்ப்பால் சுரப்பு ஊக்குவி, மூளை செயல்பாட்டினைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும், விந்து எண்ணிக்கையினை அதிகரிக்கும். வேரின் பொடி சம அளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.

No comments:
Post a Comment