நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ள நெல்கட்டான் செவல் எனும்
பாளையத்தை ஆண்டு வந்த மன்னன் பூலித்தேவன். 1755களில் ஆண்டு வந்த இந்த
மாமன்னன் கப்பம் என்று ஒரு நெல் மணி கூட கட்ட மாட்டேன் என்று வெள்ளை
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த மாமன்னர்.
இதன் காரணமாகவே இவரது பாளையத்திற்கு நெல்கட்டான் செவல் என்ற பெயர் வந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த இந்த போராளியின் 296வது பிறந்த நாள் விழா வரும் 04.09.2011 அன்று நடைபெற உள்ளது.
அம்மன்னனின் பெயரால், அறக்கட்டளை அமைத்து வருடம் தோறும், அவரது பிறந்த நாள் விழாவை நடத்தி அன்னாதானம் செய்து வருபவர் அந்த அறக்கட்டளையின் தலைவரும், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன். வரும் 4ஆம் தேதி அவர் நடத்த இருக்கும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் மனோஜ்குமார், நடிகர்கள் ராஜேஷ், கஞ்சா கருப்பு, நடிகை கன்சிகா, கவிஞர் சினேகன் போன்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

No comments:
Post a Comment