தமிழ்நாட்டு மக்களின் திருமண நிகழ்ச்சியில் தங்கம் இல்லாமல் கூட இருக்கும்
ஆனால் பட்டுபுடவை இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு பட்டு புடவையின் மீது
பென்களுக்க்கு மோகம் அதிகம் உள்ளது.
இந்த போலிகளை கண்டறிய தமிழக அரசின் பட்டு விற்பனை நிறுவனமான கோ ஆப் டெக்ஸ்சில் பட்டுச்சேலையிலும் பட்டுத்துணியிலும் உள்ள பட்டு, தங்கம், வெள்ளி, பாலியஸ்டர் போன்ற நூலிலைகளின் அளவினையும் மதிப்பிட்டு சொல்லிவிடும் ஒரு நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.
உண்மையான பட்டு விலை
அதிகம் என்பதால், செயற்கையான முறையில் செய்யப்பட்ட நூலை, வியாபார
தந்திரத்தில் உண்மையான பட்டு நூலுடன் கலந்து நெசவு செய்துவிடுகிறார்கள்அதுமட்டுமில்லாமல் வெள்ளி நூலிழைகள் என்ற
பெயரில் செயற்கையான பாலியஸ்டர் நூல் இழைகளையும் கலந்து நெசவு செய்து
பொதுமக்களிடம் ஏமாற்றி விற்பனை செய்துவிடுகிறார்கள்.
இந்த போலிகளை கண்டறிய தமிழக அரசின் பட்டு விற்பனை நிறுவனமான கோ ஆப் டெக்ஸ்சில் பட்டுச்சேலையிலும் பட்டுத்துணியிலும் உள்ள பட்டு, தங்கம், வெள்ளி, பாலியஸ்டர் போன்ற நூலிலைகளின் அளவினையும் மதிப்பிட்டு சொல்லிவிடும் ஒரு நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.
இந்த இயந்திரத்தை
(01.09.2011) சேலத்தில் அறிமுகம் செய்து வைத்த கோ ஆப் டெக்ஸ்சின் நிவாக
இயக்குனர் உமா சங்கர், பட்டு சேலைகளின் தரத்தை கண்டறியும் இந்த சோதனைக்கு
கட்டணமாக ஐம்பது ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும், இப்ப்போது சேலத்தில்
தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் தமிழ் நாடு முழுவதும் அனைத்து கோ ஆப்
டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment