பத்து வரையிலான வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 10 வரையுள்ள அனைத்து வகுப்புகளின் தேர்வுக்கான வினாத்தாள்களிலும் ஒரே மாதிரி சமச்சீர் அமைப்பைக் கொண்டுவர அரசு உத்தேசித்து வருகிறது. தற்போது, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒரேமாதிரியான கேள்வித்தாள்களே நடைமுறையில் உள்ளன. இனி இது தனியார் பள்ளிகளுக்கும் விரிவடையும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கீழ், நிபுணர்கள் குழுவானது, பருவத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள் தொகுதியை தயாரித்து வருகிறது. இதன் ஒரு முழுத்தொகுப்பானது ரூ.5 என்ற விலையில் பள்ளிகளுக்கு வழங்கப்படும். தேர்வு தினத்தன்று, சம்பந்தப்பட்ட கேள்வித்தாள்கள் பள்ளிகளுக்கு வந்துசேரும்.
அரசின் இந்த முயற்சி குறித்து சில தனியார் பள்ளிகளின் வட்டாரங்கள் கூறியதாவது, &'இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் உயர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மைகள் நீங்கும். இந்தப் பொது கேள்வித்தாளின் மூலம், எந்தப் பள்ளி சிறப்பாக செயல்படுகிறது மற்றும் எந்தப் பள்ளி மோசமாக செயல்படுகிறது என்ற உண்மைகளும் வெளிவரும்&' என்றனர்.
அதேசமயம் சில பள்ளிகளின் நிர்வாகிகள் கூறுகையில், &'அரசின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றலுக்கேற்ப நாங்கள் செயல்பட்டு வருகையில், இதுபோன்ற பொது கேள்வித்தாள் முறையானது ஒத்துவராது&' என்கின்றனர்.
மேலும் &'இதுபோன்ற ஆயத்த(Readymade) கேள்வித்தாள்களின் மூலம், ஆசிரியர்களே கேள்வித்தாள்களைத் தயாரிக்கும் வேலைகள் இனி இருக்காது. இதன்மூலம் அவர்களின் முக்கியப் பொறுப்பானது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது" என்றும் சில பள்ளிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வருடத்திற்கான வாரியத் தேர்வுகளின்(Board exams) கேள்வித்தாள்கள், அனைத்து வாரியங்களுக்கும் ஒன்றாகவே இருக்கும்.
No comments:
Post a Comment