ஷாருக்கான் நடித்து பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம்
ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதன் இசை
மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை
உற்சாகப்படுத்தினார்.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறதுஇந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஷாருக்கான்,
''உலகத் தரம் வாய்ந்த சினிமா கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதை நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். உலகத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்'' என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை உச்சரித்தார்).
அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து ஆவேசமாக பேசத் தொடங்கினார். ''இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று தனது பேச்சை தொடர்ந்தார். திடீரென்று குறுக்கிட்ட ஷாருக்கான், ''அதற்கு பதிலாக எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்'' என்றார்.
அப்போது அந்த பெண்மணி, Mute என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றதும், அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சென்னை வந்து இதுவரை ரஜினியை சந்திக்கவில்லை. சந்திக்கப்போகிறேன் என்றும் கூறினார். விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
No comments:
Post a Comment