2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., இன்று நடத்தியிருக்கும் ரெய்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காப்பாற்றும் செயல் என்றும் , காங்கிஸ் கட்சியால் ஏவப்படும் காங்கிரஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோ என்றும் சி.பி.ஐ.,யை பா.ஜ., கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேட்கர் கூறுகையில்: பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு காபினட் அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் விற்கப்பட்டுள்ளது. எந்த கம்பெனிக்கும் கரிசணம் காட்டவில்லை. ராஜா குற்றம் புரிய துணையாக இருந்தவர் சிதம்பரம் ஆவார். இதனால் ராஜாவும், சிதம்பரமும் சம அளவில் குற்றம் புரிந்தவர்கள். இவர் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் நாங்கள் கொடுத்துள்ளோம். இவரை காப்பாற்ற கடைசி முயற்சியாகவும், வழககை திசை திருப்பவும் காங்கிரஸ் முயற்சிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சி.பி.ஐ., தூண்டி விடப்பட்டுள்ளது. இது தரம தாழ்ந்த செயல் என்றும் கூறினார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு தொடர்பாக கடந்த பழைய குப்பைகளையும் தோண்டி துருவ ஆரம்பித்து இருக்கிறது சி.பி.ஐ., . பல கோடி ஊழல் நடந்த விவகாரம் காங்கிரஸ் அரசில் மட்டுமல்ல, கடந்த கால ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற கூற்றின்படி பா.ஜ., ஆட்சி செய்த (2001 முதல்) காலம் முதல் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ, அறிவித்திருந்தது. இதன்படி இன்று புதிய எப்.ஐ,ஆரை பதிவு செய்தது.இந்த காலக்கட்டத்தில் பா.ஜ.வை சேர்ந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி ஆகியோர் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்து வந்தனர். மகாஜன் காலமாகி விட்டார். இப்போது இவர் இல்லை.
இவர்கள் காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை விலைக்கு வாங்கிய வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் இன்றைய எப்.ஐ.ஆ.,ரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்படி மும்பை, மற்றும் குர்கானில் உள்ள அலுவலகங்களில் சி.பி.ஐ.,ரெய்டு நடத்தி வருகிறது. தொலை தொடர்பு செயலர் மற்றும் பி.எஸ்.என்.எல்., முன்னாள் இயக்குநர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்னும் கைது படலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் - வோட போன் விளக்கம்: இன்று நடந்து வரும் ரெய்டு குறித்து இரு நிறுவனங்கள் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் வாங்குதல் தொடர்பாக முறையான ஆவணங்கள் பராமரிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவின்படியே வியாபாரம் நடந்தது. இன்றைய ரெய்டின்போது சி.பி.ஐ.,க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment