|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

அமெரிக்காவில் ஏழை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பு !


கடந்த 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 15 பேருக்கு ஒருவர் ஏழைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும் , தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்‌கு கீழே உள்ளவர்கள் வறுமைக்‌கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்‌ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும், தொழிற்துறை நகரங்களான டெட்ராய்ட், கிராண்ட் ரேபிட், ஓ‌ஹியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் ‌வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2000 மாவது ஆண்டிற்கு பின்னர்தான அங்கு ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கொண்டதாக திகழும் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிஸிப்பி, நியூமெக்‌சி‌கோ, நெவாடா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...