|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

திருச்சி அமர் ஜுவல்லர்ஸ் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளை!

திருச்சி மலைக்கோட்டை வாசலில், போலீஸ் உதவி மையம் அருகே உள்ள நகைக் கடையில், 11 கோடி ரூபாய் மதிப்புடைய 40 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியின் வர்த்தக மையமான என்.எஸ்.பி., ரோடு மிகவும் பரபரப்பான பகுதி. இந்த வீதியில் தான், முக்கியமான ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளன. மலைக்கோட்டையைச் சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரேயும், மலைக்கோட்டை வாசலை ஒட்டியும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹிரோன் கிடியாவின் மகன்கள் பரஸ்மால், பனன்லால், கன்சியான், தேவராஜ், நவீன்சன் ஆகியோருக்கு சொந்தமான, "அமர் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக் கடைகள் இயங்கி வருகின்றன.

அமர் ஜுவல்லரியில் மொத்தம், 24 பேர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல, 9.30 மணிக்கு கடையைத் திறக்க, கடை ஊழியர்கள் வந்தனர். உரிமையாளர் பரஸ்மால் வந்த பிறகு தான் கடை திறக்கப்பட்டது. நான்கு பூட்டுகள் திறந்தன. மற்ற இரண்டு பூட்டுகள் திறக்கவில்லை. அப்போது தான், அவை வேறு பூட்டு என்பது தெரிந்தது. சந்தேகமடைந்த பரஸ்மால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பூட்டிலிருந்த கைரேகையை பதிவு செய்தனர். அதன் பின், பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது, ஆரம், நெக்லஸ், ஒட்டியாணம் வைக்கப்பட்டிருந்த ÷ஷாகேஸ் காலியாக இருந்தது. மேலும், நகைப் பெட்டிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது கண்டு உரிமையாளர்களும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட கடையை ஆய்வு செய்த ஐ.ஜி., மஹாலி நிருபர்களிடம் கூறுகையில், ""கடையில் 40 கிலோ நகைகள் கொள்ளை போனதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். மோப்ப நாய் ஜேக் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. ஜேக் அருகிலுள்ள பாத்திரக்கடை குடோன் வரை சென்றது. மீண்டும் அங்கிருந்து நேராக அமர் ஜுவல்லரிக்கு திரும்பியது.

மெயினை நிறுத்திய கொள்ளையர்கள்: நகைக் கடையில் உள்ள கேமரா இரவு நேரங்களில் செயல்படாது. ஆயினும், கொள்ளையர்கள் முன்கூட்டியே, மின்சாரம் சப்ளையாகும் மெயினை நிறுத்தி விட்டு தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். அருகில், போலீஸ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக, அந்த கேமரா சில நாட்களாக செயல்படவில்லை. இதுவும், கொள்ளையர்களுக்கு வசதியாகி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...