சென்னையில், சர்வதேச படவிழா வரும் 14ம்தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 9வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14ம்தேதி தொடங்கி, 22ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன. பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. `கான் படவிழாவில் திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன. சர்வதேச படவிழாவையொட்டி நடைபெறும் தமிழ் படங்களுக்கான போட்டியில், அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், வெங்காயம், மைதானம், வாகை சூடவா, கோ, தெய்வத்திருமகள், வர்ணம், தூங்கா நகரம் உள்ளிட்ட 12 படங்கள் பங்கேற்கின்றன. போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படத்துக்கு, முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று சர்வதேச படவிழா இயக்குனர் ஈ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment