கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள நாராயணமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலம் (வயது 45). மணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அஞ்சலத்திற்கு விஜய குமார் (25) என்ற மகனும், ரேவதி (22) என்ற மகளும் உள்ளனர். ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை. இவர் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து நேற்று முன்தினம் சென்றுள்ளார். இந்த நிலையில் அஞ்சலத்திற்கு தனது கணவர் இறந்தது முதலே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த காசி (54) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது ரேவதியின் 3 பவுன் நகையை காசி விற்று செலவு செய்து விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் காசி, அஞ்சலத்தின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். அதற்கு அஞ்சலம், தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த காசி, வீட்டில் இருந்த மண் எண்ணையை, அஞ்சலத்தின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வலி தாங்கமுடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனை பார்த்ததும் காசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அஞ்சலம் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப் இன்ஸ் பெக்டர் பிரபாவதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment