கோவாவில் 10நாட்களாக நடந்து வந்த 42வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 3ம் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. இறுதிநாள் விழா கலா அகடாமி கலை அரங்கில் கோலாகலமாக நடந்தது. * விழாவில் சிறந்த படத்திற்கான தங்கமயில் விருதுக்கு பல்வேறு படங்கள் போட்டியிட்டது. அதில் கொலம்பியா நாட்டில் தயாரான ஃபோர்ப்ரியா என்ற படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, தங்கமயில் விருதும், ரூ.50லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதனை இப்படத்தின் டைரக்டர் அலெஜன்ட்ரோ லான்டிஸ் பெற்றுக் கொண்டார்.
* ஈரான் நாட்டின் தயாரிப்பான நதிர் அன்ட் ஸிமன் என்ற பெர்ஷிய மொழி படத்திற்கு வெள்ளி மயிலும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய அஸ்கர் பர்ஹாடிக்கு பெற்றுக்கொண்டார்.
* சென்ற ஆண்டு இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதாமின்டே மகன் அபு, மலையாள படத்திற்கு, நடுவர் குழுவின் விஷேச விருது மற்றும் ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது.
* சிறந்த நடிகருக்கான ரூ.10 லட்ச பரிசுத்தொகை, இஸ்ரேல் நாட்டு படமான ரெஸ்டோரேஷன் படத்தில் நடித்த சஸ்ஸான் கேபேவுக்கு கிடைத்தது.
* சிறந்த நடிகருக்கான ரூ.10 லட்ச பரிசுத்தொகை, ரஷ்ய படமான எலெனா படத்தில் நடித்த நடேஸ்தா மார்கினாவிற்கு கிடைத்தது.
* கோவா திரைப்பட விழாவின் போது மாரடைப்பால் மரணமடைந்த பிரேசில் நாட்டு இயக்குநர் ஆஸ்கர் மரோன் ஃபில்ஹோவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விழாவின் இறுதி நாளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தவிழாவில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் சவுத்ரி மோகன் ஜதுவா, கோவா முதலமைச்சர் திகம்பர் காமத், கோவா திரைப்பட விழாவின் இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment