இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 5 சதவீத இடம் ஒதுக்கப்பட உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிமுகப்படுத்தியுள்ள கல்விக் கட்டண ரத்து திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று ஏஐசிடிஇ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேலும், 2012-13ம் கல்வியாண்டில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டண ரத்து திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவர்களுக்கு தனிக் கலந்தாய்வு நடத்தப்படும். கல்விக் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
புதிய கல்விக் கட்டண ரத்து திட்டத்தை, கடந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சில மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அதற்கு முன்பே மாணவ சேர்க்கை நடைமுறைகளை முடித்து விட்டிருந்ததால் , அப்போது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று அவர் குறிப்பட்டார்.
No comments:
Post a Comment