இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க அரசு
தயார் - ராஜபக்சே! -குசுவிட்டுக்கலாமா? இது நேற்று என் முக நூலில் படித்தது
உண்மையும் இதுதான் தமிழர்களின் பெயரை சொல்லி இந்திய பணத்தை
விரயமடிக்கும் இந்த கூட்டத்தை மாற்ற நேரம் விரைவில்... இலங்கையில் தமிழர்களுக்காக முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியது. இதில்
கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட 135 வீடுகளையும்,
யாழ்ப்பாணத்தில் கட்டப்படட 48 வீடுகளையும் தமிழர்களுக்கு இந்தியாவின்
வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா வழங்கினார். போரினால்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக
இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 1000 வீடுகளை கட்டும் திட்டத்தை
நிறைவேற்றி வருகிறோம். மேலும் 49 ஆயிரம்
வீடுகளை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை அரசுடன் ஒப்பந்தம்
கையெழுத்தாகி இருக்கிறது. தமிழர்களுக்கு தேவையான அனைத்து மறுவாழ்வு
திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றுவோம். கிளிநொச்சி,
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட 79
பள்ளிக்கூடங்களை சீரமைக்கும் பணியை இந்தியா செய்து வருகிறது. இதில் முதல்
கட்டமாக சீரமைக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை அதன் நிர்வாகிகளிடம் வழங்கி
இருக்கிறேன். மற்ற பள்ளிக்கூடங்களையும் விரைவில் சீரமைத்து வழங்குவோம். தமிழர்களின் குழந்தைகளுக்கும் கல்வி
தாராளமாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து
வருகிறோம். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி
ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன். இலங்கை
மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம்,
மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மேலும் இளநிலை படிப்பிற்கு 120 இடங்களும், கணினி பொறியியல் படிப்பிற்கு 25 இடங்களும், முதுநிலை படிப்பிற்கு 50 இடங்களும், சுய நிதி திட்டத்தின் கீழுள்ளதற்கு 40 இடங்களுமாக இந்த திட்டம் மும்மடங்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறினார்
No comments:
Post a Comment