உண்ணும் உணவு உடலுக்கும், மனதிற்கும் ஊட்டத்தை தருவதாக இருக்கவேண்டுமே தவிர
உபத்திரம் தருவதாக இருக்கக் கூடாது. ஆரோக்கியத்திற்காக சாப்பிட்ட காலம்
போய் அநாவசியத்திற்கு கிடைத்ததை எல்லாம் சாப்பிட தொடங்கிவிட்டனர். இதனால்
உடல்பருமன், நீரிழிவு, இதயநோய் என தொடர்நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
கண்டதை சாப்பிடாமல் கவனமாக சாப்பிட்டால் இதயநோயை தவிர்க்கலாம் என்று
மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
‘ஹார்ட் அட்டாக்’ என்ற
வார்த்தையே சிலரை அட்டாக் செய்து விடும். இருமுறை அட்டாக் வந்தும்
பிழைத்தவர்கள் உண்டு. வந்தபின் அதற்கேற்ப உண்பதை விட வருமுன் காக்க
அதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்
முதலில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
நோ டென்சன் ரிலாக்ஸ் நீரிழிவு,
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு.
அதேபோல் புகைப்பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், மொனோபாஸ்
பருவத்தை கடந்தவர்கள், டென்சன் பார்ட்டிகள் இதய நோய் தாக்கும் ஆபத்து
உள்ளது. அதேபோல் உடல் உழைப்பு இல்லாதவர்கள், குடும்பத்துல யாருக்காவது இதய
நோய் உள்ளவர்கள் சற்றே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்பது
மருத்துவர்களின் அறிவுரை.
என்னென்ன அறிகுறி தென்னைமரத்தில்
தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்ற பழமொழி இந்த நோய்க்கு
சரியாக பொருந்தும். ஏனெனில் இதயநோய்க்கு அறிகுறி இதயத்தில் மட்டும்
தெரிவதில்லை. அடிக்கடி தலைவலி, தலைசுற்றல், பார்வை தடுமாற்றம்
போன்றவையாகவும் எச்சரிக்கை மணி அடிக்கும். ஞாபகமறதி, மூச்சு விடறதால
சிரமம், தோள்பட்டை வலி, இப்படி ஏதாவது ஒரு விதத்தில் இதயநோய்க்கான அலாரம்
அடிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் எது வந்தாலும் உடனே மருத்துவ
ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
உணவுக்கட்டுப்பாடு தேவை நோய்
வந்தபின் சிகிச்சை, உடற்பயிற்சி மேற்கொள்வதை விட உணவு கட்டுப்பாடு
இருந்தால் இதயநோயை விரட்டலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உணவு விஷயத்தில்
முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை
சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத்
தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல
இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா
இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும்
சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. எனவேதான் காய்கறிகளும்
பழங்களும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள உணவுகளில் எல்லாம்
‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லப்படும் அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு
உள்ளதா என்பதை பேக்கிங் லேபிளில் போடவேண்டும் என்ற சட்டம் உள்ளது.
நம்மூரில் அதை கடைபிடிப்பதில்லை. அதனால் கடைகளில் விற்கும் கண்டதையும்
விழுங்கிவிட்டு கடைசியில் இதயநோய்க்கு ஆளாக நேரிடுகிறது.
எதை சாப்பிடலாம் கீரை,
முழு தானியங்கள், காய்கறிகள், போன்றவை சாப்பிடலாம். அசைவத்துல மீன்
மட்டும் சாப்பிடலாம். ஏனெனில் அதில் உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம்
இதயத்துக்கு நல்லது. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவை இதய
ஆரோக்கியத்திற்கு ஏற்றது. தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா
கொடம்புளி உபயோகிக்கலாம். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
கொழுப்பு குறைந்தாலே இதயம் பாதுகாக்கப்படும். அனைத்தும் ஆரோக்கியமாக
இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை இதயம்
பலவீனமானவர்களுக்கு ஊறுகாயும், அப்பளவும் ஆபத்தானது. அதில் உள்ள அதிக உப்பு
ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும். எனவே அவற்றை
தவிர்க்கலாம். பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய்,
சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின் உணவுகள், தக்காளி
சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ
போன்றவற்றை தவிர்க்கலாம். ஒரு முட்டையில 210 மி.கி. கொழுப்பு இருப்பதால்
கூடவே கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். புகைப் பிடிக்கும் பழக்கம்
உள்ளவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். முக்கியமாக டென்சன் கூடாவே
கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.
No comments:
Post a Comment