|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை!

வடகொரியாவில் சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அவர்கள் தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2வது கிம் ஜோங்கின் தந்தை கிம் 2வது சுங் 1994ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் நல்லா அழுததுன்னு பார்த்து அரசாங்கத்துல பதவி ஏதும் கொடுப்பாங்களோ என்னமோ? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...