|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 February, 2012

சி அறையில் 420 தங்க குடங்கள்!


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில் 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மேலும் 420 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சி பாதாள அறையைத் திறக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 27ம் தேதி அந்த அறை திறக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர் அங்கிருந்த தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை பிரித்து எடுத்தனர். அதன் பிறகு அவற்றிற்கு வரிசைப்படி எண்கள் கொடுத்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர்.

அப்போது சி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்மநாப சுவாமியின் முகக்கவசம், தங்க அங்கி மற்றும் சிறப்பு பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டன. இது தவிர 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்களுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறையில் மட்டும் 450 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகம் மதிப்பீட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தனை குடங்களையும் கணக்கிட்டு மதிப்பீடு செய்ய மும்பையில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்படுகிறது. இந்த சி அறையில் இருக்கும் பொருட்களை மட்டும் மதிப்பீடு செய்ய 3 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகின்றது.

ஹெராயின் பயன்பாடு இந்தியா NO: 1




தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் ஹெராயின் போதைப் பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சபையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.எஸ். மாலிக் கூறியதாவது, ஹெராயின் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்காசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகிறது. தெற்காசியாவிலேயே இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. அதன் மதிப்பு ரூ. 7,000 கோடி ஆகும்.

தெற்கு மற்றும் மேற்கிந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளது தான் இதற்கு காரணம். இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் ஹெராயின் இங்கிருந்து அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 7,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக ஓபியம் பயிரிடப்படுகிறது. இங்கு ஹெராயின் தவிர கொக்கைனுக்கும் மவுசு அதிகரித்துள்ளது என்றார்.கடந்த ஆண்டு 23 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தை கொஞ்சம் வலுப்படுத்துங்கள்!


சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்று பொது மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ஒரு கோடி... ஒன்றரை கோடி என்று உங்களிடம் (முதல்வர் ஜெயலலிதா) நிதி கொடுக்கிறார்களே அமைச்சர்கள்?. இந்தப் பணம் எப்படி வந்தது?. வெளிப்படையாகவே அவர்களால் இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறதென்றால், இதைவிட நூறு மடங்கு உங்களுக்கு கப்பம் கட்டினார்களா?.

திமுக அரசில் நிர்வாகச் சீர்கேடு என்றீர்களே. இப்போது உங்கள் ஆட்சியிலும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களே... ஆனால், சென்னையைச் சுற்றிலும் பெரும் தொழிலதிபர்கள் நடத்துகின்ற நிறுவனங்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பில்லையே.. ஏன்?. எந்தக் கப்பம் உங்கள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறது?. பிரேக் இல்லாத வாகனமாகச் சென்று கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி. அதற்கு பிரேக் போடவேண்டும் இந்தத் தொகுதி மக்கள். வெற்றி பெற்று பிரேக்கை இயக்குபவராக இருப்பார் எங்களின் வேட்பாளர் சதன் திருமலைக்குமார். என் கொள்கையில் தவறு இருந்திருக்கலாம். எங்கள் அணுகுமுறையில் விமர்சனம் எழுந்திருக்கலாம். ஆனால் என் சொந்த வாழ்க்கையினை சுகபோகம் ஆக்கிக் கொள்வதற்காக நான் இம்மியளவும் நெறி தவறியதில்லை. இங்கே சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்றார்.

சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும் உலக வங்கி!


சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் அறிவுரையை ஏற்பதாக சீனாவும் தெரிவித்துள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி, 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கடந்த 2011ல், 8.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2026 - 2030க்குள் 5 சதவீதம் என்ற அளவிற்கு குறையும். இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால். இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு, தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும். சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் லீ கீகியாங், "பொருளாதார மாற்றத்தை சீனா ஏற்கனவே துவங்கிவிட்டது. நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சி, சமூக பொருளாதார மேம்பாடு இவற்றில் சீனா கவனம் செலுத்தி வருகிறது' என்றார்.

இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு!

முத்தரப்பு தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை). இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும். 

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.

எங்கள் பக்கம் இந்தியா?


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதாக உறுதியளித்துள்ளது என இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 19 வது கூட்டம் துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய கமிஷனர் நவநீதம் பிள்ளை, தனது உரையில் இலங்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா விவகாரம் தற்போது சூடுபிடித்திருப்பதால் அது பற்றி மட்டுமே குறிப்பிட்டார். எனினும், கவுன்சிலுக்கு அளிக்கப்படும் பரிந்துரையின் அடிப்படையில், உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் சர்வதேச அமைப்பு எதையும் கவுன்சில் உருவாக்கவில்லை என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

என்ன தீர்மானம்? இலங்கை அரசு நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும், அவ்விதம் இலங்கை செயற்படுத்தாத போது, இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றை அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரியும், அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கவுன்சிலில் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இத்தீர்மானம் மார்ச் இரண்டாம் வாரத்தில் தாக்கலாகலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆதரவளிக்கும் எனவும் தெரிகிறது.

இலங்கை தொடர் பிரசாரம்: இந்த ஆதரவை முறியடிக்கும் விதத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஒரு வாரத்திற்கு முன்பே ஜெனீவா சென்று அங்கு சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். இலங்கை அமைச்சர்கள் மேலும் சிலர், ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டனர். அதிபர் ராஜபக்ஷேவும், சிங்கப்பூர், பாகிஸ்தானுக்குச் சென்று வந்தார். இந்நிலையில், அமைச்சர் பீரீஸ் மீண்டும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அவசரமாக சென்றுள்ளார் என இலங்கை பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள் பேச்சு: நேற்று முன்தினம் ஜெனீவா கூட்டத்தில் பேசிய இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க,"தீர்மானத்தை தோற்கடிப்பதில் இந்தியா எங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை ஏற்கனவே அமல்படுத்தத் துவங்கி விட்டதால் அதுகுறித்து ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை' எனத் தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், "இவ்விவகாரத்தில் இந்தியா எங்கள் பக்கம் இருக்கிறது. இதுகுறித்து இந்தியாவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என 100 சதவீதம் நம்புகிறோம்' என்றார். இதே கருத்தை, அமைச்சர் திஸ்ஸ விதரணவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு ஆதரவாக, இலங்கைக்கு இந்தியா துரோகம் செய்யாது எனக் கூறியுள்ளார். இலங்கை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதுகுறித்துக் கூறுகையில்,"மேற்குலக நாடுகளின் தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு தருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி உறுதியளித்துள்ளார்' என்றார்.

ஆர்ப்பாட்டங்கள்: அதேநேரம், தீர்மானத்தை எதிர்த்து இலங்கை முழுவதும் நேற்று முன்தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மக்களை அரசு நிர்பந்தப்படுத்தி வரச் செய்ததன் மூலம் தனது குறைகளை மறைக்க முயல்வதாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இத்தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு சரிவரத் தெரியாத நிலையில் இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு இந்திய அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரதமருக்கு வைகோ கடிதம்: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது: இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மகிந்த சமரசிங்கே கூறியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்திய ஐகமிஷனர் அசோக் கே. காந்தா, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து, இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் உண்மை தான் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா இழைக்கப் போகும் மன்னிக்க முடியாத மாபெரும் வஞ்சனையாக இது இருக்கும். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்குமானால், தமிழர் இனப் படுகொலைக்கு எதிரான கூட்டுக் குற்றவாளியாக இந்தியா நிற்க வேண்டி வரும். இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது!


மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது பெற்றார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதை இவருக்கு வழங்கினார். ஸ்டெல்லாவை முதன்மை கல்வி அலுவலர் நாகராஜன், சாரணர் இயக்க பொறுப்பாளர் ரோணிக்கம், தலைமை ஆசிரியை நிர்மலா பாராட்டினர்.

இதே நாள்...


  • முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம்(1896)
  •  பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)
  •  செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)
  •  ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)

விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம்!

இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய ‘ஜப்னா’ படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்று தெரிவித்துள்ளார் அவர்.

2030 ல் இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.


வருகிற 2030 ஆம் ஆண்டு இந்தியா,இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக உலகின் முன்னணி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான பி.பி. நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் ரஹ்ல் கூறியதாவது:  வரும் 2030 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் 35 விழுக்காட்டை கொண்டிருக்கும் என்பதால் இவ்விரண்டு நாடுகளும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளாகவும்,அதிக நுகர்வோர்களை கொண்டதாகவும் இருக்கும்.  மேலும் 2030 ஆம் ஆண்டு இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.அதன் 47 விழுக்காடு எரிவாயு தேவை மற்றும் 97 விழுக்காடு எண்ணெய் தேவை ஆகியவை இறக்குமதி வழியே பூர்த்தி செய்யப்படும்.  40 விழுக்காடு நிலக்கரி தேவைப்பாடு இறக்குமதியையே சார்ந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

24வது நாளாக ‌நீடி‌க்கு‌ம் அரசு சித்த மருத்துவ மாணவர்கள் போரா‌ட்‌‌ட‌ம்!

முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்ககோரி நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்க‌ளி‌ன் தொடர் உள்ளிருப்பு போராட்ட‌ம் 24வது நாளை எ‌ட்டியு‌ள்ளது. ஆனா‌ல் மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்தை த‌‌‌மிழக அரசு க‌ண்டுகொ‌ள்ளவே இ‌ல்லை.  முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்கக்கோரி, நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்புப் போராட்டம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த போரா‌ட்‌ட‌ம் இ‌ன்று 24வது நாளை எட்டியுள்ளது.  த‌ங்க‌ளி‌ன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கை விடப்போவதில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளன‌ர்.  இதனடையே இந்த பிரச்னை குறித்த வழக்கு செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

28 February, 2012

பார்த்ததில் பிடித்தது!


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா?


ஐ.நா. மனித உரிமை சபையின் 19வது மாநாடு தொடங்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான மாபெரும் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசும், ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினரும் பெரும் பீதியடைந்துள்ளனர். 30 நாடுகள் வரை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இலங்கையின் பெரும் பீதிக்குக் காரணமாகும். கடைசி நேரத்தில் தீர்மானத்தை முறியடிக்க தேவையான வேலைகளைச் செய்ய 50க்கும் மேற்பட்ட இலங்கை அரசுக் குழு ஜெனீவாவுக்கு ஏற்கனவே வந்து முகாமிட்டுள்ளது. மொத்தம் நான்கு வாரங்களுக்கு நாட்களுக்கு இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. வாரத்திற்கு ஐந்து நாள் கூட்டம் நடைபெறும். மாநாட்டின் இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

முன்னதாக நடைபெறும் உறுப்பு நாடுகளின் உரையாற்றலில் இலங்கை சார்பில் அந்த நாட்டு அமைச்சரான மகிந்தா சமரசிங்கே பேசவுள்ளார். இந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவே இதைக் கொண்டு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்லது தென் அமெரிக்கா இதைக் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 15ம் தேதிக்குள் அனைத்துத் தீர்மானங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால் அந்தத் தேதிக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் தாக்கலாகும் என்று தெரிகிறது.

எத்தனை நாடுகள் ஆதரவு? ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதையும் தாண்டி 30 நாடுகள் வரை ஆதரவாக இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கலாம் என்பதுதான் பரபரப்பின் உச்சமாகும். அமெரிக்கா,கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மிகவும் உறுதியாக உள்ளன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் சமீபத்தில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தது. அதேபோல ஆப்பிரிக்க நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள் பல, விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவானவை என்பது நினைவிருக்கலாம்.

தீர்மானத்தைத் தடுக்க இலங்கை கடும் முயற்சி இதற்கிடையே தீர்மானத்தை தடுக்க இலங்கை கடைசி நேர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த வேலையை அங்கு சென்று முகாமிட்டுள்ள 50 பேர் கொண்ட இலங்கை குழு மேற்கொண்டுள்ளதாம். இப்போது தீர்மானம் எதுவும் வேண்டாம், மாறாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து யோசிக்கலாம் என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டதாம். ஆனால் அதை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினர் மீது போர்க்குற்றங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்க ஆதரவுடன் கனடா கொண்டு வந்த தீர்மானமும் ஏற்கனவே ஒரு முறை தோற்கடிக்கப்பட்டது. அப்போது இந்தியா, இலங்கைக்கு தீவிர ஆதரவாக இருந்தது நினைவிருக்கலாம். இப்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் இத்தீர்மானத்தை நேரடியாகவே கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதுதான் இலங்கையை பீதிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாடு மார்ச் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜெனீவாவில் குவிந்துள்ள இலங்கைக் கூட்டம் இலங்கை அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் உட்பட 50க்கும் மேற்பட்ட இலங்கை குழுவினர் ஜெனிவா வந்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக எந்த விஷயமும் இல்லை என்பதால் ராஜபக்சேவும் அவரது கூட்டத்தினரும் பெரும் அச்சத்தில் உள்ளனராம். தீர்மானம் நிறைவேறினால் உலக அளவில் அது இலங்கைக்கு விழும் மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும் என்பதால் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் தங்களது பார்வையை ஜெனீவா பக்கம் திருப்பியுள்ளனர்.

இலங்கை அரசை ஆதரிக்காதீர் வைகோ!

இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ  உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆனால், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இலங்கை அரசு, தனக்குத்தானே ஒரு விசாரணைக்குழுவை நியமித்துக்கொண்டது. அந்தக் குழு, அனைத்து உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, கோயபெல்ஸ் பாணியில், இலங்கை அரசின் நடவடிக்கைளை நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


2009 ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு மூன்றாவது வாரங்களில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் முன்னெடுப்பில், பதினாறு நாடுகள், ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தை, ஜெனீவா நகரில் கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அக்கூட்டம், 2009 மே மாதம் கடைசி வாரம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில், போர்க்காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, இந்தியா பெரிதும் உதவியது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இப்போது, உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. எனவே, பிப்ரவரி 27 ஆம் நாள், ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற, ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன.


இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் இனக்கொலை நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான   அத்தகைய ஒரு தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது என்று, நான் தங்களுக்கு ஏற்கனவே எழுதி உள்ள பல கடிதங்களில் கேட்டுக் கொண்டு உள்ளேன். ஆனால், பிப்ரவரி 27 ஆம் நாள், மகிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், “இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்” என்று தெரிவித்து இருப்பது, பேரதிர்ச்சியாக உள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சேவை பிப்ரவரி 26 ஆம் நாள் நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழர்களின் படுகொலையால், தமிழகத்திலும், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் இதயத்தில் குருதி வடிந்து கொண்டு இருக்கின்றது.
உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும்.  ஏற்கனவே காயப்பட்டுப் புண்ணாகி இருக்கின்ற தமிழர் நெஞ்சில் மேலும் தீ வைக்கின்ற எந்த நடவடிக்கையையும்  மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

நடிப்பு விதேசிகள்!


ஒர் அரசியல்வாதி என்ன தொழில் செய்தார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால்தான், அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.  அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.  இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.
 
சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார்.  வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:  ""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''
 
அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தனிநபருக்கே, மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்? அரசு அலுவலர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கு வரி செலுத்தத் தவறியவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள். அவர்கள் முறைகேடாக, லஞ்சத்தால் பதவியின் ஆதாயத்தால் பொருள் சம்பாதித்த குற்றவாளிகளாகக் கருத இடமில்லாமல் போய்விடும்.  பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.  சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, அவர் கூடுதல் வருமானத்துக்கு ஆதாரமாகக் காட்டும் நிறுவனங்கள், பங்குகள் எப்படிக் கிடைத்தன, பழையதா, புதிதா என்பதையெல்லாம் கணிக்க முடியும்.
 
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.  தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாக வேண்டும். அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டுப் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்பவர்கள் நேர்மையாளர்களாக இல்லாமல் போனால் அதன் விளைவு மக்களாட்சியையே தடம்புரளச் செய்துவிடும்.
 
வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருப்பதில் என்ன பிரச்னை? நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. இந்தக் கணக்குகளை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான், ஊழல்வாதிகள்,கள்ள மார்க்கெட்டில் தவறாகப் பணம் சம்பாதிப்பவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், சந்தேகம் ஏற்படும்போது விசாரணைக்கு வலியுறுத்தவும் முடியும்.  செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்கப் போவதாக உத்தரப் பிரதேசத்தில்போய் வாய்ப்பந்தல் போடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

1 லட்சம் கோடி பொக்கிஷத்தை பாதுகாக்க பாதாள அறை!

1 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களை கொண்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், பொக்கிஷங்களை பாதுகாக்க உயர் பாதுகாப்பு கொண்ட புதிய பாதாள அறை உருவாக்கப்பட உள்ளது.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் உள்ள விலை மதிக்க முடியாத வைரம், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் வடிவமைக்கப்பட்ட ஏராளமான ஆபரணங்கள் மற்றும் பொருட்களை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மதிப்பீடு செய்து வருகிறது.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் "இஸ்ரோ உதவியுடன் விஞ்ஞானப்பூர்வமாக பொக்கிஷங்களை மதிப்பிடும் பணிகள் கடந்த வாரம் துவங்கின.இந்நிலையில், மதிப்பீடு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான எம்.வி.நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள அரிய பொருட்களை பாதுகாக்க, பூமிக்கு அடியில் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய அறை ஒன்றை உருவாக்கும் யோசனை உள்ளது. இந்த கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். இதற்கான செலவுகள் குறித்தும் மதிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.

கோவா திரைப்பட விழாவில் பங்குபெற்ற "தி ஆர்டிஸ்ட்'

  1. இம்முறை, ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், மவுனப் படமான "தி ஆர்டிஸ்ட், அயர்ன் லேடி, ஹ்யூகோ, தி டிசண்டன்ட்ஸ், மிட் நைட் இன் பாரிஸ் ஆகிய படங்கள் முன்னணியில் இருந்தன.சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்காக, ஐந்து ஆஸ்கர் விருதுகளை, "தி ஆர்டிஸ்ட்' படம் வென்றது. அதே போல், கலை இயக்கம், சவுண்டு மிக்சிங், எடிட்டிங், விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்டவற்றிற்காக, "ஹ்யூகோ' படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது.மூன்றாவது விருதுமுன்னாள் பிரிட்டன் பிரதமரான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், "அயர்ன் லேடி' படத்தில், தாட்சர் வேடத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்புக்கு, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இது, இவர் பெறும் மூன்றாவது ஆஸ்கர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான், பாகிஸ்தான் படங்கள்சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருதை, ஈரானின் "ஏ செபரேஷன்' படம் வென்றது. மிகச் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை, பாகிஸ்தானின் "சேவிங் பேஸ்' குறும்படம் பெற்றத

  1. பாகிஸ்தானில், பெண்கள் மீது நடத்தப்படும் ஆசிட் வீச்சு குறித்து எடுக்கப்பட்ட படம் தான் "சேவிங் பேஸ்'. பிரான்சில் தயாரிக்கப்பட்ட "தி ஆர்டிஸ்ட்' படம், 1927 முதல் 1932 வரையிலான காலகட்டத்தில், ஹாலிவுட்டில் நடக்கும் திரையுலக மாற்றங்களால் பாதிக்கப்படும் மவுனப் பட கதாநாயகனை மையமாகக் கொண்டது.பொதுவாக, ஹாலிவுட் படங்கள் தான், சிறந்த படம் உள்ளிட்டவற்றுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் செல்லும். இதற்கு மாறாக, இம்முறை பிரெஞ்சு படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான் கச்சேரி: இவ்விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, இசைக் கச்சேரி நிகழ்த்தினார். "127 ஹவர்ஸ்' படத்தில், தான் இசையமைத்த பாடல்களை அங்கு பாடினார். ரிலையன்ஸ் தொழிலதிபர் அனில் அம்பானியும் கலந்து கொண்டார். "தி ஹெல்ப், வார் ஹார்ஸ், ரியல் ஸ்டீல்' ஆகிய படங்களைத் தயாரித்த, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "ட்ரீம் வொர்க்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தில், 51 சதவீதம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பங்குகளை வைத்துள்ளது.ஈரானில் கொண்டாட்டம்; ஈரானின் பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட, "ஏ செபரேஷன்' படம், ஈரானிய நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது. நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் குடியேற வேண்டும் என விரும்பும் மனைவி, அல்ஜமீர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை விட்டு விட்டு வரத் தயங்கும் கணவன் இடையிலான பிரச்னைகளை, இப்படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது. சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான ஆஸ்கர் விருதை, இப்படம் பெற்றிருக்கிறது என்ற தகவல் வெளியானதும், ஈரானில் மக்கள் மத்தியில், மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது.இஸ்ரேல் படமான, "பூட்நோட்' என்ற படமும், ஆஸ்கருக்கு வந்திருந்தபடியால், இந்த வெற்றி இஸ்ரேலுக்கு எதிரான வெற்றியாக அங்கு சித்திரிக்கப்படுகிறது. அதோடு, ஈரானிய பண்பாட்டுக்கு, அமெரிக்காவில் கிடைத்த வெற்றி எனவும், ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஈரானில், செயற்கைக்கோள் வழியான வெளிநாட்டு சேனல்கள் தடை செய்யப்பட்டிருப்பதால், தேசிய தொலைக்காட்சி, செபரேஷன் படத்திற்கான விருது வழங்கும் காட்சிகளை, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

27 February, 2012

இதே நாள்...


  • இந்திய தேசிய அறிவியல் தினம்
  •  இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
  •  முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
  •  வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
  •  எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)

அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மக்கள் நலப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.


 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா கடந்த ஜனவரி 23-ம் தேதி தீர்ப்பளித்தார். மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்றும், அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி, அவர்களுக்கான பணப் பலன்கள் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கத் தலைவர் என். செல்லப்பாண்டியன் தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் நலப் பணியாளர்களின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவதில்லை என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது.  எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லப்பாண்டியன் தனது மனுவில் கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

பார்த்ததில் பிடித்தது!

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.... ? கத்தி சொருகி வைக்க...!! 


நாளைக்கு சின்ன பசங்க இதை பார்த்துட்டு கத்தியை சொருக தலையை 


தேடப்போவுதுங்க...!!!


அணுஉலை எதிர்ப்பிற்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்ற நச்சான 


கருத்துக்களை கூறி படமெடுத்து ஆடிய நச்சி பாம்புகளை தலைநகரத்திலேயே 


கூடி தலையில் தட்டி போட்ட அணு உலைக்கு எதிரான மக்கள்கூட்டம்!


நட்பு வலியது....

அது எளிதாய் எல்லோரையும் இணைத்துவிடும்"


மக்கள் விரோத மத்திய அரசே!

கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறுத்து!


Tamil nadu electricity board ROCKZZZZZZ...


ஐநாவை முற்றுகையிட ஐம்பதாயிரம் மக்கள் ஐரோப்பா எங்கும் 


அணிதிரள்கின்றனர் .


Jai-Ho Moment !!!

Indian Hockey Team Qualified for London Olympics 2012 


Nature at it's extreme ..



இதெல்லாம் டூ மச்


பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு தடை விதிக்க போப் ஆண்டவர் வேண்டுகோள்!


ரோம் நாட்டில் உள்ள வாடிகன் நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான 3 நாள் சிறப்புக்கூட்டம் நடந்தது. இதில் போப் ஆண்டவர் ஜான் பெனடிக்ஸ் கலந்து கொண்டு  அப்போது அவர்,   ‘’உலகம் முழுவதும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணமான பிறகு தங்கள் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தை பெற நினைக்கும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனால் மனம் உடைந்து போகும் அவர்கள் உடலுறவு மூலம் குழந்தை பெற முயற்சி செய்வதில்லை.உடனே அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சிக்கிறார்கள்.

டாக்டர்களும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையை உருவாக்குகிறார்கள். சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. செயற்கை கருத்தரிப்பு கடவுளின் படைப்புக்கு விரோதமானது. எனவே அதை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும். குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கை கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக்கூடாது. செயற்கையான முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை ஒழிக்கவேண்டும்’’என்று கூறினார். 

26 February, 2012

இதே நாள்...


  • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
  •  நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
  •  பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
  •  ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
  •  அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி தகுதி!



2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடந்த தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை இந்திய சந்தித்தது. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இத்தொடரில் அவர் 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக தகுதி பெறவில்லை. 

கின்னஸ் புத்தகத்தில் சந்திர பகதூர் டாங்கி


உலகின் மிக குள்ளமான நபராக, நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி,72, என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன்ரி பலாவிங், என்பவர் தான் இதுவரை உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டவர். இவரின் உயரம், 59.9 செ.மீ., மட்டுமே. இந்நிலையில், பலாவிங்கை விட, 5.3 செ.மீ., உயரம் குறைவான அதாவது, 54.6 செ.மீ., உயரம் கொண்ட சந்திர பகதூர், கின்னஸ் நிறுவனத்தால் உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். கின்னஸ் உலக பதிவு நிறுவனத்தின் தலைவர் கிரெய்க் க்ளெண்டே தலைமையிலான ஒரு குழு, காத்மாண்டுவிற்கு வந்து சந்திர பகதூரின் உயரத்தை அளந்து உறுதி செய்த பின், இந்த அறிவிப்பை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 கிலோ எடையுள்ள சந்திர பகதூர் பற்றி, நேபாள ஆய்வாளர்கள் சிலர், மூன்று வாரங்களுக்கு முன் வெளியுலகிற்கு தெரிவித்தனர். இதையடுத்து தான், அவரது பெயர் உலகளவில் பிரபலமானது.

உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு !

அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம்

உயிரின் விலை ரூ. 5

ரூ. 5க்காக ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் தள்ளிவிட்டதில் 21 வயது இளைஞர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூரைச் சேர்ந்தவர் சுபம்சிங். அம்மாநில போலீஸ்துறையில் சேர்வதற்காக பரீட்சை எழுதியிருந்தார். அதன் முடிவுகளை காண்பதற்காக நேற்று சத்னாவிற்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊர் திரும்பியுள்ளார். சத்னாவிலிருந்து ராம்பூருக்கு ரூ. 20 வசூலிப்பதற்கு பதிலாக கண்டக்டர் ரூ. 25 கேட்டுள்ளார். கண்டக்டர் கூடுதலாக ரூ. 5 கேட்டதால் சுபம் சிங் ஆத்திரமடைந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக, கண்டக்டர் சுபம்சிங்கை ஓடும் பஸ்சில் இருந்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சுபம்சிங் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் பணக்காரநாடு கத்தார்...

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. 

25 February, 2012

ஒரு பல்கலையின்கீழ் 100 கல்லூரிகள் மட்டுமே இயங்கப் பரிந்துரை!


ஒரு பல்கலையின் கீழ், 100 கல்லூரிகள் மட்டும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என, யு.ஜி.சி -க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான நிபுணர் குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, தியாகராஜன் தலைமையில், 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, 2008 ஆகஸ்ட்டில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைத்தது. இக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து, 80 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை, சமீபத்தில் யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை கொள்கை அளவில், யு.ஜி.சி., ஏற்றுக்கொண்டதுடன், 12வது ஐந்தாண்டு திட்ட செயல்பாடுகளில் சேர்த்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் எடுத்துக்காட்டு எந்த பல்கலையாக இருந்தாலும், ஒரு பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், 100 கல்லூரிகள் மட்டுமே இயங்க வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால்தான், பல்கலையின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள், புதிய பல்கலையை ஆரம்பிக்கும்போது, பல்கலைகள் இல்லாத மாவட்டங்களில் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், குறைந்தது 10 தன்னாட்சிக் கல்லூரிகளை, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நடத்த வேண்டும். இந்த கல்லூரிகளை, தனியார் கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடத்த வேண்டும். இவ்வாறு, பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. முக்கியத்துவம் இல்லை இதுகுறித்து, தியாகராஜன் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில், எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஏற்ப, நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களில், செனட், சிண்டிகேட் உட்பட பல அமைப்புகள் உள்ளன. இதில், தொழில்துறை பிரதிநிதிகளுக்கோ, கல்வியாளர்களுக்கோ, விஞ்ஞானிகளுக்கோ, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இவர்களை கட்டாயம் நியமனம் செய்யவும், சட்ட விதிமுறைகளில் இடம் இல்லை. இவர்கள் குழுவில் இருந்தால்தான், காலத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுவதிலும், வேலை வாய்ப்பு மிக்க புதிய பாடத் திட்டங்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்த முடியும். எனவே, இவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதை, சட்ட ரீதியாக உறுதிசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு, முறையாக பயிற்சி அளிப்பது, இணையதள நிர்வாக முறையை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
அண்ணா பல்கலையின் கீழ் 500 கல்லூரிகள்! தமிழகத்தில், 500 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையின்கீழ் இருந்து வந்த நிலையை மாற்றி, நிர்வாக வசதிக்காக, முந்தைய தி.மு.க., அரசு, நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் புதிய பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தியது. புதிய பல்கலைக்கழகங்களில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும், கல்வித்தரம் சரியாக இல்லை என்றும் கூறி, 500 கல்லூரிகளையும், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையின் கீழே, தற்போதைய அரசு கொண்டு வந்துள்ளது. இது, நிர்வாகச் சுமையை ஏற்படுத்தும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...