இரவு நேரத்தில் காரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வதற்கும், விரும்பதகாத சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் புதிய யுக்தி ஒன்றை சமூக விரோதிகள் கையாள்வது குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) மீது முட்டையை வீசி எறிந்து காரை நிறுத்தி அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. எனவே, இரவில் காரில் செல்லும்போது காரின் முன்பக்க கண்ணாடி மீது முட்டை வீசினால் உடனடியாக காரை விட்டு இறங்கி சோதனை செய்ய வேண்டாம்.
மேலும், காரின் கண்ணாடியை துடைப்பதற்காக நீரை பீய்ச்சியடித்து, வைப்பரை ஆன் செய்து சுத்தம் செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில், முட்டையுடன் நீர் சேரும்போது பிசின் போன்று ஆகிவிடும். அப்போது வைப்பரை ஆன் செய்தால் கார் கண்ணாடி முழுவதும் பனிப்படர்ந்தது போன்று முட்டை படிந்து விடும். இதனால், சாலை பார்த்து தொடர்ந்து காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த சந்தர்ப்பத்தைத்தான் சமூக விரோதிகள் பயன்படுத்தி வழிப்பறி மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் காரில் செல்லும்போது மர்மநபர்கள் கார் கண்ணாடி மீது முட்டையை வீசி எறிந்தால், உஷாரடைந்து அங்கிருந்து பாதுகாப்பானை இடத்துக்கு காரை ஓட்டி செல்வதுதான் சிறந்தது.
No comments:
Post a Comment