காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியை பாண்டிமாதேவிக்கு தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறையின் உதவி பேராசிரியாக பணியாற்றி வருபவர் முனைவர் கே.பாண்டிமாதேவி. அவர் பல்வேறு ஆராய்ச்சி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு தேசிய நிதி நிறுவனங்களிடம் நிதியுதவி பெற்று ஆய்வு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறையால் வழங்கப்படும் தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது- 2010க்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.பாண்டிமாதேவி அந்த விழாவில் பங்கேற்று அமைச்சரிடம் இருந்து தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருதினையும், ரூ. 20,000 ரொக்கப் பரிசினையும் பெற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறையில் அவர் ஆற்றி வரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இளம்பெண் விஞ்ஞானி விருது பெற்ற 7 பெண்களில் பாண்டிமாதேவியும் ஒருவர்.
No comments:
Post a Comment