|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 March, 2012

சென்னை பெண் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக!


சென்னையைச் சேர்ந்த டிவி தொகுப்பாளர் ரோஷல் மரியா ராவ் இந்த ஆண்டின் பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச இந்திய அழகிகள் தேர்வு போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2012 அழகியாக வன்யா மிஷ்ராவும்,பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா எர்த் 2012 அழகியாக பிராச்சி தேசாயும் தேர்வு செய்யப்பட்டனர்.பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக சென்னையின் ரோஷல் மரியா ராவ் தேர்வு செய்யப்பட்டார்.

ரோஷல் சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையை சேர்ந்தவர். அவரது தந்தை டாக்டர் என்.வி.ராவ், தாய் வென்டி ராவ். ரோஷல் தற்போது சானல் யு.எப்.எக்ஸ். டி.வி. யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அழகி பட்டம் வென்றது குறித்து ரோஷல் கூறுகையில், "எனக்கு சிறு வயதிலேயே அழகு கலைகளில் நாட்டம் உண்டு. எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்ததும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டேன். எப்படியாவது அழகி பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு எனது உள்ளத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தேன்.இப்போது இந்திய அழகி பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறேன். வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி சீனாவில் சர்வதேச அழகி போட்டி நடக்கிறது. அதிலும் சர்வதேச அழகி பட்டத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

இந்தவார பலன்31-3-2012 முதல் 06-4-2012 வரை

மேஷம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். விருந்தினர் வருகையால் மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதிய பொருட்கள் வாங்கக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

ரிஷபம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் குதூகலமாக இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டு. வீடு அல்லது வாகனம் மூலம் லாபம் உண்டாகும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப தலைவருக்கு அதிக வருமானம் வரும் வேலை கிடைத்து மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து பாராட்டு பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு செல்வாக்கு அதிகமுள்ள பதவி கிடைக்கலாம்.

மிதுனம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியக்கூடும். உடல் நலம் நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம் பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வீடு மாற்ற இது உகந்த வாரம் அன்று. ஆன்மீக பலம் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அதிக வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தடைகள் அகலும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களுக்கு உதவி செய்வீர்கள்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரி்த்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.

கன்னி பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்க முன்பணம் கொடுக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இரு்பபார்கள். அதனால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

துலாம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். மனம் நிம்மதியாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறப்புகளைக்குத் தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். சேமிப்பில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் இன்பமாக நடக்கும். மகளுக்கு மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். தந்தை வழி உறவுகளால் மனம் மகிழ்வீர்கள். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

விருச்சிகம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரின் உடல் நலத்தில் கவனம் செல்லும். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும்.

தனுசு பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

கும்பம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மீனம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வேலைக்கு போகும் பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். யாரைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

டெஸ்ட் ரேங்கிங் டாப்-10 ஒருவர் கூட இந்தியரில்லை!



ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் முதல் 10 பேரில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பேட்ஸ்மேன்களின் வரிசையில் 12வது நபராக சச்சின் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் டி.வில்லியம்ஸ், காலீஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி உள்ளனர். இதனால் டெஸ்ட் தரவரிசையில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய வீரரான சச்சின் 12வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற டிராவிட் 19வது இடத்தில் உள்ளார்.பட்டியலில் 23வது இடத்தில் லட்சுமணனும், 25வது இடத்தில் அதிரடி வீரர் ஷேவாக்கும் உள்ளனர். கேப்டன் டோணி 43வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன் நீடிக்கிறார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் சமீது அஜ்மல் உள்ளார். பந்துவீச்சாளர்களின் பட்டியிலும் டாப்-10 வீரர்களில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. பட்டியில் உள்ள முதல் இந்தியராக 12வது இடத்தில் ஜாகிர்கான் உள்ளார். அதன்பிறகு 20வது இடத்தில் ஓஜா உள்ளார்.இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன்சிங் 23வது இடத்திலும், இஷாந்த் சர்மா 28வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டர்களுக்காக பட்டியலின் டாப்-10 வீரர்களிலும் இந்தியர்கள் யாரும் இல்லை.இந்திய அணி சரியுமா? அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 3வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.

சாப்பிடாதீங்க எச்சரிக்கை ரிப்போர்ட்!



குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.அவசர உணவுகள்இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை

ஐபிஎல் சென்னை அணியின் பலம்-பலவீனம்!

ஐபிஎல் தொடரின் 5வது சீசனுக்கு தயாராகி வரும் அணிகளில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கோப்பையை வெல்லும் பலம் உள்ளது. சென்னை அணியில் புது வீரர்களின் வருகை மற்றும் சில வீரர்களின் இழப்பு மூலம் அணியின் பலமும், பலவீனத்தையும் தெளிவான கணிக்க முடிகிறது. கடந்த 2010, 2011 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள சென்னை அணி இந்த ஆண்டும் வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றிப் பெற காத்திருக்கிறது. சென்னை அணியில் டோணி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா (துணை கேப்டன்), பத்ரிநாத், விரிதம்மன் ஷா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், சாகிப் ஜக்காதி ஆகியோர் முன்னனி வீரர்களாக அணியில் உள்ளனர். மேலும் உள்ளூர் வீரர்களாக பல புதுமுகங்களும் இணைந்துள்ளனர்.

கேப்டன் டோணி: ஐபிஎல் 1 தொடரில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சென்னை அணியின் கேப்டன் டோணி. இந்திய அணியின் கேப்டனாக உள்ள டோணி, சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்திய அணியின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோணி, திறமையான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். மேலும் அவர் அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்துவது சென்னை கூடுதல் பலம். துணை கேப்டன் ரெய்னா இடது பேட்ஸ்மேனாக மிடில் ஆடரில் களமிறங்கும் ரெய்னா அதிரடியாகவும், பொறுமையாகவும் ஆடும் தன்மை வாய்ந்தார். மேலும் அணியை வழிநடத்த டோணிக்கு பக்க துணையாக உள்ளார்.

பேட்டிங்கில் சென்னை அணியை பொறுத்த வரை நீண்ட பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. மைக்கேல் ஹஸ்ஸி, பிரவோ, ரெய்னா, டோணி, பத்ரிநாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் அணி சிறந்த ஸ்கோர் எட்ட உதவுவார்கள். பந்துவீச்சில் அணியின்  சுழல் பந்துவீச்சிற்கு உள்ளூர் வீரர் அஸ்வின் உள்ளார். அவருக்கு துணையாக ரெய்னா, ஜடேஜா, ஜக்காதி ஆகியோர் செயல்படுவர். வேகப்பந்து வீச்சிற்கு சென்னை அணி முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களை மட்டுமே நம்பி உள்ளது. ஸ்காட் ஸ்டைரீஸ், நியூவன் குலசேகரா, பென் ஹில்பின்ஹஸ், அல்பில் மார்கல் ஆகியோர் சென்னை அணி நம்பியுள்ளது.ஆல் ரவுண்டர்களின் செயல்பாடு சென்னை அணியி்ல் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், குலசேகரா, ஸ்காட் ஸ்டைரீஸ், பென் ஹில்பின்ஹஸ் ஆகியோர் உள்ளனர்.

பலம்: சென்னை அணியில் புதுமுகமாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என்ற அனைத்திலும் சிறந்து விளங்குவது அணியின் பலம். பேட்டிங்கில் மைக்கேல் ஹஸ்ஸி அணிக்கு சிறப்பான துவக்கம் அளிக்கிறார்.அவரை தொடர்ந்து ரெய்னா, டோணி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் ஸ்கோரை உயர்த்துகின்றனர். பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் அஸ்வின், மார்கல் ஆகியோர் தூள் கிளப்புகின்றனர்.பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களின் கலவை அணிக்கு சிறந்த பலமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லாதது பெரும் பலமாக கருதப்படுகிறது. சென்னை அணியின் பெரும்பாலான போட்டிகள் உள்ளூர் மைதானத்தில் நடப்பது அணிக்கு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பலவீனம்: சென்னை அணியி்ல் 9 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் சில வீரர்களால் குறிப்பிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எடுத்துக்காட்டாக துவக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தொடரின் சில போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார். இதனால் அணியின் பேட்டிங் பலம் குறைக்கிறது.அணியில் வேக பந்துவீச்சாளர்களாக உள்ள போலிங்கர், மார்க்கல் ஆகியோரின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. முரளிதரன் இல்லாதது அஸ்வினுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இதில் இந்த ஆண்டு புதிதாக அணியி்ல் சேர்க்கப்பட்டுள்ள ஜடேஜா, பென் ஹில்பென்ஹஸ் ஆகியோரின் ஆட்டத்தை அணி அதிகம் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ள சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

உலக அளவில் 218வது இடம் டில்லி ஐஐடி நிறுவனம்!


தர வரிசை பட்டியலில் டில்லி ஐஐடி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் உலக அளவில் 218வது இடத்தையும் பிடித்துள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் புரேந்த‌ரேஸ்வரி கூறுகையி்ல் கடந்த 2011-ம் ஆண்டு டைம்ஸ் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் மும்பை ஐஐடி நிறுவனம் 317-வது இடத்தையும், பெங்களூரூ ஐஐடி நிறுவனம் 321-வது இடத்தையும் பிடித்துள்ளது.  குளோபல் பிசினஸ் ஸ்கூல் 2012 அறிக்‌கையின் படி ஆசிய பசிபிக் பகுதியில் அகமதாபாத் ஐஐடி நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 43 மத்திய பல்கலைகழகங்களும், 265 மாநில அரசின் பல்கலைகழகங்களும், 80 தனியார் பல்கலைகழகங்களும், 129 நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றது.  இவைகளில் தமிழகத்தி்ல் அதிகபட்சமாக 54 பல்கலைகழகங்களும், உ.பி.,மாநிலத்தில் 48, மகாராஷ்டிரா 41, ஆந்திராவில் 40, ராஜஸ்தானில் 39, கர்நாடகாவில் 35 பல்கலைகழகங்கள்‌ செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஏழு பிறவிகள் எவை?


ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.  இதை  புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி  பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக் கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்  என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

30 March, 2012

இதே நாள்...


  •  மால்ட்டா விடுதலை தினம்(1979)
  •  ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
  •  முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
  •  ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)

Po Nee Po Tamil Song


இலங்கை புனரமைப்பு அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு 15ம் தேதிக்கு மேல்!

 இலங்கைக்கு விரைவில் அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு செல்ல உள்ளது. அனேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இந்தக் குழு இலங்கை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, புனரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கனவே, 500 கோடி ரூபாய் வரை, இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைக் கொண்டு, வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை பார்வையிடுவதற்காக தேசிய அளவிலான அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்ப, மத்திய அரசு தயாராகி வருகிறது. இக்குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கவுள்ளார்.  தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் குழுவில் இடம்பெறவுள்ளார். அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரையின் பெயர் தேர்வாகியுள்ளது. அவரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டாலும், அவர் இடம்பெறுவாரா அல்லது வேறுயாரும் இடம்பெறுவரா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவே முடிவு செய்வார் என தெரிகிறது. இக்குழு அமைக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், இக்குழு இலங்கைக்கு பயணமாகி, வீடுகட்டும் பணிகளை பார்வையிட்டு திரும்பும் என, தகவல்கள் 

108 ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடு கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை!

 ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கான, 108 ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடு நடந்ததாகவும், அதனால், கார்த்தி சிதம்பரம் உட்பட ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அம்மாநில கவர்னர் சிவராஜ் பாட்டீலிடம் நேற்று, பா.ஜ., கட்சி புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.  பா.ஜ., தேசிய செயலர் கிரித் சோமய்யா தலைமையில், எம்.பி.,க் கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, கடந்த சில ஆண்டுகளாக, "சிகிட்சா ஹெல்த் கேர்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆறு ஆம்புலன்ஸ்களுடன் சில வருடங்களுக்கு முன், இந்நிறுவனம் மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினராக மத்திய தொலைத் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் உள்ளார். இந்த நிறுவனத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ராகுலின் முன்னாள் செயலர் ஷாபிமாதர், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா மற்றும் மருமகள் உட்பட, காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.  இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து, இந்த நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் சேவைக்காக, போலி ரசீதுகளை அரசிடம் சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி வருகிறது. ஒரே நாளில் ஒரு ஆம்புலன்ஸ், 243 நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக கணக்கு காட்டியுள்ளது.இந்தத் திட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில், ஆம்புலன்ஸ் சேவைக்கு அனுமதி பெற்றுள்ளது. இதனால், இன்னும் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இணையதளத்தை முடக்க சதி!

உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை சனிக்கிழமை முடக்க சமூக விரோதிகள் (சைபர் கிரிமினல்) சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் - சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டார்.  "ஆபரேஷன் அன்மாஸ்க்' என்ற பெயரில் அவர் ஆற்றிய உரை:இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.


அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012. யார், எவர் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ""ஆப்பரேஷன் பிளாக் அவுட்'' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அவர்.

செல்போன்களிலிருந்து தங்கம்?


சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா.  இது குறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன. இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித் தெடுக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்வெர்ட்டர் கவனிக்க வேண்டிய விசயம்...


மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 200வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம். பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம். இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
பராமரிப்பது எப்படி?

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார். இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!

பார்த்ததில் பிடித்தது!


சென்னை ஐபிஎல் போட்டிக்கு மின்சாரம் வழங்க நீதிமன்றம் தடை

# அப்போ ’பீல்டர்’கள் மெழுகுவர்த்தியும், ’அம்பயர்’கள் தீப்பந்தமும் புடிச்சிக்கிட்டு நில்லுங்க!


3 திரை விமர்சனம்...


இந்த படம் பள்ளி குழந்தைகளிடையே நிலவும் கலாச்சார சீரழிவை மேலும் தூண்டி.. தவறான எண்ண ஓட்டங்களுக்கு வழிவகுக்கும். . தவிர்க்க வேண்டிய படம். முன்ன எல்லாம் வயசுக்கோளாறுல தப்பு பன்னுவாய்ங்க....இப்ப வயசுக் கோளாறுல சினிமா எடுக்குறானுங்க....

29 March, 2012

பார்த்ததில் பிடித்தது!




வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம்!


கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.சுகாதார சீர்கேடு பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை பராமரித்தால் கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுத்து அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

பொதுசுகாதார சட்டம் இதற்காக 1939-ல் தமிழக பொதுசுகாதார சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ராஜன் பரிந்துரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த சட்டத்தை இயற்றியது. அதன்படி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு 50 பைசா முதல் 5 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசாங்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள சரத்துக்களை முறையாக அமல் படுத்தவில்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தலைதூக்க தொடங்கியதும், கடந்த 2009-ல் பொது சுகாதார சட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது.

புதிய திருத்தம் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்ய, கூடுதல் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. சுகாதார துறை செயலாளர் சுப்புராஜிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அபராதம் விதிப்பு இதில் முக்கிய பரிந்துரை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்பதாகும். அந்த அறிக்கை 3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயிரூட்டல் தற்போது அந்த சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்க, அ.தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சட்டத்தில் இந்த காலத்துக்கு பொருந்தும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, ஆலோசனை நடத்தப்படுகிறது. சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் மூலம் நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சாக்கடை நீரை தேக்கி வைக்க கூடாது. கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் கொட்ட கூடாது.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் வீசக் கூடாது. அதே போல தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவைகளால் கழிவுகளை பொது இடங்களில் குவிக்க கூடாது. குடிநீர் ஆதாரப்பகுதிகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. அனைத்து தரப்பு சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.வீடுகளை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது. பொது சுகாதார சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினால் 80 முதல் 90 சதவிகிதம் சுகாதார சீர்கேட்டை சரி செய்து விடலாம் என்பது சுகாதார துறையின் எதிர்பார்ப்பு.

புருனே சுல்தான்....


இந்தோனேசியா அருகே உள்ள, செல்வச் செழிப்பு மிகுந்த குட்டி நாடு புருனே. இங்கு மன்னராட்சி நடக்கிறது. தற்போது, மன்னராக இருப்பவர், சுல்தான் ஹசனல் போல்க்கையா. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர். இவருக்குள்ள சொத்து விவரங்கள் பற்றி கூறும்போது, ஒவ்வொரு நொடியும், 5,878 ரூபாய் அதிகரிப்பதாக கூறுவது உண்டு. அதாவது, ஒவ்வொரு நாளும், அவரது சொத்து மதிப்பு, 2.11 கோடி ரூபாய் அதிகரிக்கிறது. அப்படியானால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். சாதாரண மனிதர்களுக்கு, எட்டாக் கனியாக இருக்கும் தங்கம், புருனே சுல்தானின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருக்கிறது. இவர் வசிக்கும் அரண்மனையை, ஒரு மினி சொர்க்கம் எனலாம். இந்த அரண்மனையில், 1,788 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும், தங்கம் மற்றும் வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அந்த அரண்மனையில், 257 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. இந்த அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள், இங்குள்ள ஒவ்வொரு அறையையும், 30 நொடிகள் சுற்றிப் பார்த்தாலே, அனைத்து அறைகளையும் பார்த்து முடிப்பதற்கு, 24 மணி நேரம் ஆகும். தங்க மூலாம் பூசப்பட்ட, சொகுசு வசதியுடன் கூடிய விமானம் ஒன்றும், புருனே சுல்தானுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், ஆறு சிறிய விமானங்களும், ஹெலிகாப்டரும், இவரது அரண்மனையில் உள்ளன. புருனே சுல்தான், லண்டன் சென்றால், அவர் பயணம் செய்வதற்காகவே, லண்டனில் எப்போதும் ஒரு சொகுசு காரை ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறது, பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. சுல்தானின் மகளின் திருமண கொண்டாட்டங்கள்,  14 நாட்கள் நடந்தன. இதற்காக, கணக்கு வழக்கு இல்லாமல், பணம் வாரி இறைக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், வி.வி.ஐ.பி.,க்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். திருமணத்தின்போது, வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை இளவரசி அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த மலர்க் கொத்து, மணமக்கள் அமர்வதற்காக வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனம் ஆகியவற்றிலும் வைரங்கள் டாலடித்தன. பல கோடி மதிப்புள்ள காதணியையும் அவர் அணிந்திருந்தார். புருனே மன்னரிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மட்டும், 531 உள்ளன. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். படித்து முடிப்பதற்குள், நாம் தான் களைப்படைந்து விடுவோம். 

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப்பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப்பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்மனுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன்மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்களகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக்கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல்நாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். காலை 6.21 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் பற்றி படர்ந்தது. சூரியக்கதிர் பட்டு சிவலிங்கம் பிரகாசித்த காட்சியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.  * அம்மன் வழிபாடு: மூலவர் பிரம்மபுரீஸ்வரரை சூரியக்கதிர்கள் வழிபட்ட அதேநேரத்தில், பிரம்ம சம்பத் கௌரி அம்மனின் பாதங்களில் சூரியக்கதிர்கள் பணிந்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.  * திருத்தேர்: பிரம்மபுரீஸ்வர் கோவிலில் பங்குனித் திருத்தேர் விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான பங்குனித்தேரோட்டம், வரும் ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. கோவிலின் தேர் பழுதடைந்ததால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. 25 ஆண்டுக்கு பின், இக்கோவில் தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாள்...


28 March, 2012

இந்தியப் பெருங்கடலில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா!

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.

ஆளில்லா வேவு விமானங்கள் கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பறக்கவிட திட்டமிட்டுள்ளது.அமெரிக்கா பல வகையான ஆளில்லா வேவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. 40 ஆயிரம் அடி உயரத்தில் 20 மணிநேரம் தொடர்ந்து பறந்து வேவு பார்க்கக் கூடிய இஸ்ரேலிய தயாரிப்பான ஈடன் ஆளில்லா வேவு விமானமும் இதில் அடக்கம். நானோ ஹம்மிங்பேர்டு என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் பார்ப்பதற்கு உண்மையான ஹம்மிங்பேர்ட் பறவையைப் போலவே இருக்கும். 6.5 இஞ்ச் இறக்கை கொண்ட இந்த விமானம் பேட்டரி உதவியுடன் 8 நிமிடங்கள் வானில் பறந்து திரும்பும்.

பிரிடேடர் பி ஆளில்லா வேவு விமானங்களானது 66 அடி நீள இறக்கைகளைக் கொண்டது. இவை 50 ஆயிரம் அடி உயரத்தில் 30 மணிநேரம் தொடர்ந்து இயங்கி வேவு தகவல்களை சேகரிக்கும்.
இவை தவிர ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படக் கூடிய வழக்கமான ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா வேவு விமானங்களும் உண்டு. ஆப்கானிஸ்தானில் 289 தாக்குதல்களை இதுவரை நடத்தி 2224 தலிபான், அல்குவைதா தலைவர்களை படுகொலை செய்ய இவையே பயன்படுத்தப்பட்டன.இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில்தான் இருக்கும்.

இடம்பெயரும் டிகாகோ கார்சியோ இந்தியப் பெருங்கடலில் டிகாகோ கார்சியோ தீவில் அமெரிக்கா கடற்படைத் தளத்தை ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இத்தீவுக்கான குத்தகை உரிமையை 50 ஆண்டுகாலத்துக்கு இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இதனால் இந்தியப் பெருங்கடலில் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கோக்கோஸ் தீவுக்கு டிகாகோ கார்சியோ தீவு கடற்படை தளத்தை ஒட்டுமொத்தமாக இடம்பெயரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் சீனா ஒபாமா பயணத்தின் போது அமெரிக்க படைகள் ஆஸ்திரேலியாவில் குவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசியான் நாடுகளான புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா,வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன.வியட்நம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும். எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் நிலை சர்வதேச அரங்கில் இந்தியா இனி அமெரிக்காவின் நட்புநாடாகத்தான் திகழவேண்டிய நிலை உருவாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தை அமெரிக்கா தொடங்கி வைத்திருக்கிறது. நேட்டோ அமைப்பில் இந்தியா இணைந்தால் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சீனாவுக்கு கடும் சவாலாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகும்.அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியா,சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும்.

ஹோர்முஸ்-மலாக்கா ஜலசந்திகள் வளைகுடா பிரதேசத்தில் ஈரானுக்குச் சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியைத்தாண்டிதான் அரபிக் கடலுக்கோ பெர்சிய வளைகுடாவுக்கோ செங்கடலுக்கு எண்ணெய் எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியும். இதேபோல் தென்கிழக்காசிய நாடுகளும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான மலாக்கா ஜலசந்தியைத்தாண்டித்தான் எண்ணெய் எரிபொருள் கப்பல்களை நகர்த்த முடியும்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டி வருவதால் அங்கு போர்மேகம் சூழ்ந்து அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிற்கின்றன. இங்கிலாந்தும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளன.மலாக்கா ஜலசந்தி ஒட்டிய தென்சீனக் கடலில் சுற்றியிருக்கும் வியட்நாம் போன்ற சிறுசிறு நாடுகள் சீனாவை எதிர்த்து நிற்கின்றன. இப்பொழுது தம் பங்குக்கு அமெரிக்காவும் களமிறங்கி நிற்கிறது.3-ம் உலகப் போர் என்பது மூளுமேயானால் ஹோர்முஸ் ஜலசந்தியிலோ அல்லது மலாக்கா ஜலசந்தியை அண்மித்த தென்சீனக்கடலிலோதான் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து.

கோபத்தை குறைக்க வழி?

முதலில் கோபம் எதனால் வருகிறது? கோபம் அடைவதனால் நன்மை என்ன? கெடுதல் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் எதனால் வருகிறது? என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.  இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.  அது சரி...  நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்ன்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? 

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.  இதை தடுக்க  டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.  இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீங்க...உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும். அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. 

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க...தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற  கொடிய நோயை  பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.  நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராõõõõõது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

இதே நாள்...


  •  தாய்வான் இளைஞர் தினம்
  •  அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது(2004)
  •  பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
  •  யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)

A VERY FAST SHORT FLIM.


27 March, 2012

பார்த்ததில் பிடித்தது!


7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு தொடங்கியது. தமிழகத்தில் இந்தப் பணியில் சுமார் 1.20 லட்சம் பேர் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து இன்று அது தொடர்பான அறிக்கை வெளியிட்டப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன. தற்போது, கூட்டுக் குடும்ப எண்ணிக்கை குறைந்து தனிக் குடித்தனம் அதிகரித்துள்ளது. 75 சதவீதம் பேர் தனிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 44 சதவீதம் கான்கிரீட் வீடுகளாக உள்ளன. மண் சுவர் வீடுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டில் 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. சிமென்ட் தரையுடன் கூடிய வீடுகளின் எண்ணிக்கை, 55 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளன.

நீராதாரத்தைப் பொறுத்தவரை 79.8 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில் 35 சதவீதம் பேருக்கு வீட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கிறது. 7 சதவீதம் பேர் குடிநீருக்காக அரை கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 12 சதவீதமாக இருந்தது.

64 சதவீதம் பேர், வீட்டு வளாகத்துக்குள் குளிக்கும் வசதியை கொண்டுள்ளனர். 50 சதவீத குடும்பத்தினர் கழிவு நீர் கால்வாய் இணைப்பு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் இது 64 சதவீதமாக இருந்து, இப்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது. இப்போதும் 48.3 சதவீத குடும்பத்தினருக்கே வீட்டுக்குள் கழிப்பிட வசதி உள்ளது (தேசிய அளவில் இது 46.9 சதவீதமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பெட்டர்).

சென்னை 95 சதவீத வீடுகளிலும், கன்னியாகுமரியில் 87 சதவீத வீடுகளிலும் கழிப்பிடம் உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் வெறும் 19 சதவீத வீடுகளிலும், அரியலூர் மாவட்டத்தில் வெறும் 18.1 சதவீத வீடுகளிலும் மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

93.4 சதவீத குடும்பங்களுக்கு மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை. 2001ம் ஆண்டு 78.2 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது அது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் தான் 92 சதவீத குடும்பங்களில் டிவி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். 75 சதவீத வீடுகளில் தொலைபேசி இணைப்பு உள்ளது. இதில் 69 சதவீத இணைப்புகள் செல்போன்கள் ஆகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...