படத்துக்கும் தலைப்புக்கும் சத்தியமா சம்பத்தம் இல்லை
ஆன்லைன் காதல் மூலம் ஒரு நூதன முறையில் பண மோசடி செய்வது சென்னையில் அரங்கேறி வருகிறது. இது போல் ஆன்லைன் காதல் மோசடி மூலம் பணம் பறித்த பட்டதாரி பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார்.இப்போது அதே ஆன்லைன் காதல் மோசடியை ஆந்திர அழகி ஒருவர் சென்னையில் அரங்கேற்றி, பல கோடி பணத்தை சுருட்டி இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இந்த ஆன்லைன் அழகியிடம் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 7 பணக்கார இளைஞர்கள், தங்கள் மனதை பறிகொடுத்து, அவர் விரித்த காதல் வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த விபரீத மோசடி அழகி ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.
இந்த மோசடி அழகி ஆன்லைனில் காதல் வலை விரிப்பதே ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். பி.எஸ்.சி. பட்டதாரி. கம்ப்யூட்டர் ஞானம் உள்ளவர். தனது புகைப்படத்தை இன்டர்நெட் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து, இவரை தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் இனிக்க, இனிக்க பேசுவார். இளைஞர்களின் வசதியான பின்னணியை கேட்டுத் தெரிந்து கொள்வார். தான் பணம் கறப்பதற்கு வசதியான ஏமாறும் இளைஞர்களை பார்த்து தேர்வு செய்வார். அதன்பிறகு காதல் வலையை விரித்து இளைஞர்களை விழ வைப்பார். திருமணம் வரை கதையை கொண்டு செல்வார். பின்னர் திடீரென்று தனது பெற்றோருக்கு இருதய ஆபரேஷன் என்றும், லட்சக்கணக்கில் பணம் தேவை என்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் சோக கதையை சொல்வார். தனக்கு பணம் இல்லை என்றும் நாடகமாடுவார். இதில் ஏமாந்து இரக்கப்படும் இளைஞர்களிடம் நைசாக பேசி லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கி விடுவார்.
பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கதை விடுவார். பின்னர் அந்த இளைஞர்களை நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து பணத்தை பிடுங்குவார். பணம் கைக்கு வந்ததும், ஏமாந்த இளைஞனை கழற்றி விட்டு, விடுவார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியாது. செல்போன் நம்பரையும் மாற்றி விடுவார். போலி முகவரியை கொடுத்துதான் இவர் செல்போன் கனெக்ஷனும் பெறுவார். தனது வீட்டு முகவரியை கூட போலியாகவே கொடுப்பார்.
இவரிடம் ஏமாந்த இளைஞர்கள் 7 பேரும் சென்னையில் பிரபலமாக உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுதான் பணத்தை கொடுத்துள்ளனர்.ஒரு இளைஞர் தனது 3 சொகுசு கார்களை விற்று ரூ.30 லட்சத்துக்கு மேல் இந்த ஆன்லைன் மோசடி அழகியிடம் மோசம் போய் விட்டதாகவும் சோகமாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த அழகிக்கு சங்கீதா, அபர்ணா என்று வித, விதமான பெயர்களும் உள்ளது. ஏமாந்த இளைஞர்களிடம் இந்த அழகி தன்னை ஒரு டாக்டர் என்றும், என்ஜினீயர் என்றும் கதை விட்டு ஏமாற்றி உள்ளார். இந்த அழகியை பொறி வைத்து பிடிக்க விசேஷ போலீஸ் படை ஒன்று களத்தில் இறக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று விசாரணை நடத்தி விட்டு வந்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் இந்த அழகியிடம் மேலும் இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அழகி யாரையாவது இதே ஸ்டைலில் காதல் வலை விரித்து, மோசடி விழூகம் வகுத்தால் உடனடியாக சென்னை போலீசை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment