|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2012

நண்பரின் தாயாரை காதலித்த மாணவர்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மாது என்கிற பாரத் (வயது 26). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இவருக்கும் தீர்த்தமலையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 27 ந் தேதி நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க கோவைக்கு செல்வதாக பாரத் கூறிவிட்டு, வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். அதன்பின் எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. வீடு திரும்பவும் இல்லை. இதனால் பாரத்தை, அவருடைய பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவருடைய பெற்றோர் கோவையில் உள்ள கல்லூரிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது பாரத் 10 நாட்களுக்கு முன்பிருந்தே கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மணமகள் வீட்டாரும் செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் பாரத்தின் திருமணம் நின்றது. இந்த நிலையில் மாயமான பாரத்தை அவருடைய பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாரத்துடன் பிளஸ் 2 வில் ஒன்றாக படித்தவர் நவீன்குமார். இவருடைய வீடு பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரில் உள்ளது. நவீன்குமார், பாரத்துக்கு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். நவீன்குமார் மற்றும் அவருடைய தந்தை செல்வராஜ் ஆகியோர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். பாப்பிரெட்டிபட்டியில் நவீன்குமாரின் தாயார் ஜோதி (வயது 43) மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே கோவையில் இருந்த நவீன்குமார், அவரது தந்தை ஆகியோர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர். வீட்டுக்கதவை தட்டியபோது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ஜோதியும், பாரத்தும் அருகருகே சேலையில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது வெளியான தகவல்கள் வருமாறு: கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த பாரத், தனது நண்பர் என்ற முறையில் கோவையில் நவீன்குமாரை அடிக்கடி சந்திப்பார். இதனால் சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு பாரத் வரும்போது, நவீன்குமாரின் வீட்டுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.அப்போது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நண்பரின் தாயார் ஜோதிக்கும், பாரத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த நெருக்கம் இருவரையும் இணைபிரியா காதலுக்கு உட்படுத்தி விட்டது. பொருந்தாத வயது என்றாலும் தகாத உறவு இருவரையும் பிரிக்கமுடியாத நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நிலையில் அரசல் புரசலாக இருவரது பழக்கம்பற்றி கேள்விப்பட்ட பாரத்தின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்தனர்.

இந்த திருமணத்தை பாரத் விரும்பாமல் ஊரைவிட்டு வெளியேறி இருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாரத் ஊருக்கு ரகசியமாக வந்து ஜோதியை சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சேலையில் தூக்கு போட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...