சபாஸ் ராமகோபாலன் இப்பதான் ஒரு நல்ல முடிவு!
காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா? அனுசரிக்கப்பட வேண்டியதா? என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் 'மகத்தான' கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காதலர் தினம் என்பது உலகமயமாக்குதலின் ஒரு அம்சம். நமது மரபில் சந்தோஷ தினங்களை கொண்டாடுவதும், துக்க தினங்களை அனுசரிப்பதும் வழக்கம். அப்படிப்பார்த்தால் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா? அல்லது அனுசரிக்கப்படவேண்டியதா?. குடும்பம் அன்பு என்று அன்றாட வாழ்க்கையோடு காதலை கலந்து விட்ட இந்த நாட்டில், வருடத்திற்கு ஒரு காதல் என மாறும் நாடுகளின் வழக்கம் ஏன்?. தினந்தோறும் காதலைக் காதலிக்கும், நமக்கு தனியாகக் காதலர் தினம் என்று ஒன்று எதற்கு?. நாட்டின் பல மாநிலங்களிலும் காதலர்கள் தினத்தன்று நடத்தும் வன்முறைத் தாக்குதல் நடத்துவதை நாம் கண்டிக்கிறோம்.
ஆனால், காதல் என்ற பெயரால் காமத்தை வளர்க்கின்ற இந்த வக்ரபுத்திக்கு என்ன தீர்வு?. தேடித்துருவி ஆராய வேண்டும். டெல்லியில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழ்நாட்டில் வினோதினி என்ற பெண்ணை ஆசிட் வீசி தாக்கி கொலை பண்ணிய சம்பவம், 3 வயது சிறுமியை கசக்கி எறிந்த கொடுமை போன்ற கேவலங்களுக்கு கடுமையிலும் கடுமையான தண்டனைகளை, கொடுத்து, கடைசி மூச்சு உள்ளவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது. மனசாட்சி உள்ள நல்லவர்கள் வல்லவர்களாகி தடுக்க வேண்டும். வழி தேடுவோம், தீர்வு காண்போம். 20 ஆண்டுகள் போற்றிப் பாதுகாத்து வரப்பட்ட நம் சகோதரி ஒரு நொடியில் அழிவதா?. இது மகத்தான கேள்வி, ஒரு சகோதரி, ஒரு மகள், ஒரு அண்ணி, ஒரு மருமகள் என்ற உறவுடன் பிரச்சனையை அணுகி தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.
No comments:
Post a Comment