சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் வில்லியம்ஸ் உள்பட 18 பேரை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷார்ஜா கப்பல் நிறுவனம் ஒன்றில் கேப்டனாக பணியாற்றி வரும் வில்லியம்ஸ் சில தினங்களுக்கு முன்னர்தான் நைஜீரியா சென்றுள்ளார். பிப்ரவரி 12ம் தேதி வில்லியம்ஸ் உள்ளிட்ட 18 பேரும் நைஜீரிய நாட்டு துறைமுகத்திலிருந்து, 120 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்ட கப்பலுக்கு , சிறிய கப்பல் மூலம் சென்றனர். இரு தினங்கள் ஆகியும் கப்பலில் சென்று சேராததால், அவர்களது கதி என்னவானது என தெரியாத நிலையில், காணாமல்போன 18 பேர்களையும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நைஜீரிய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நடுக்கடலில் கொள்ளையர்கள் இவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட கப்பல் கேப்டன் வில்லியம்ஸின் மனைவி கிளாடிஸ், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார். தமது கணவர் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து அவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமது கணவரை மீட்டுத்தருமாறு மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment