திண்டுக்கல் நத்தம் ரோடு ஏ.பி., நகரில் வசிப்பவர் முகமது சித்திக், 57.
மெங்கில்ஸ் ரோட்டில், கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். கிழக்கு
ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரிய புஷ்பம் மகள் விக்டோரியா ராணி, 29,
இந்நிறுவனத்தில் வேலை செய்தார். சித்திக், குடும்பத்தினரை பிரிந்து
வாழ்வதால், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு, மரிய புஷ்பம் கூறினார்.
கடந்த 2012, ஜூன், 25ல், விக்டோரியா ராணிக்கு, வஹிதா ராணி என, பெயர்
மாற்றி, சித்திக் திருமணம் செய்துகொண்டார். தனது மகளுக்கு, வீடு, நகைகளை
சித்திக்கிடம் இருந்து, மரிய புஷ்பம் வாங்கினார். இதையடுத்து, விழுப்புரம்
மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெயராஜ கணபதிக்கு, 32, தன் மகளை
வைத்து, மரியபுஷ்பம் வலை விரித்தார். ஜெயராஜ கணபதி, திண்டுக்கல் வந்து
விக்டோரியாவை அழைத்துச் சென்றார்.
மனைவியை காணாமல் தேடிய சித்திக், சென்னையில் இருப்பதை அறிந்து அழைத்து வந்தார். ஆனால், விக்டோரியா, ஜெயராஜ கணபதியுடன் தொடர்பு வைத்திருந்தார். ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது சித்திக், விக்டோரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மகளிர் போலீஸ் மற்றும் எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததால், ஜே.எம்., 2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், சித்திக் மயக்க மருந்து கொடுத்து, மானபங்கப்படுத்தி, வீடியோ எடுத்ததாக, திண்டுக்கல் மகளிர் போலீசில், விக்டோரியா புகார் செய்தார். சித்திக் தான் விக்டோரியாவின் கணவர் என தெரியாமல், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சித்திக் தாக்கல் செய்த மனு மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, கோர்ட் உத்தரவிட்டது. இதன் படி, விக்டோரியா ராணி, தாய் மரிய புஷ்பம், உறவினர்கள் அமுதா, ராஜூவை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment