இலங்கை நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தத் தவறிவிட்டதாகக்
கூறி கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில், மனித உரிமை
ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்துக்கு
இந்தியாவும் ஆதரவு அளித்தது. இதனால் இந்த தீர்மானம் வெற்றிபெற்றது.இருப்பினும் இந்த நடவடிக்கை போதாது என்றும், ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி, இதுதொடர்பாக மனித உரிமை
ஆணையத்தில் மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என அமெரிக்காவின்
வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு
இருந்தது. இந்த நிலையில் இந்தியா வந்த இலங்கை அமைச்சர் இந்த
தீர்மானத்துக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று நம்பிக்கை
தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்ட போது, ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தால், அதை இந்தியா ஆதரரிக்கும்'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment