|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது!


ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான புகார்கள் கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார முறைமையில், போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன. நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும் சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது. இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை. எப்போதாவதுதான் பொறுப்பு ஏற்கின்றனர். இதனாலேயே பெரும்பாலான அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் 

நாட்டிலேயே பணக்கார முதல்வர்!


நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான் என, தெரியவந்துள்ளது. இவருக்கு 87.27 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற அமைப்பு வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு 51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு 8.1 கோடி ரூபாய்க்கும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு 4.7 கோடிக்கும், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கு 3.74 கோடிக்கும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு 2 கோடிக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 1.78 கோடிக்கும், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு 1.9 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன. விரைவில் சட்ட தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுக்கு 6.76 கோடிக்கும், மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபிக்கு 6 லட்சத்திற்கும், உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரிக்கு 1.69 கோடிக்கும், கோவா முதல்வர் திகாம்பர் காமத்திற்கு 3.23 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன.

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு 87.27 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே பணக்கார முதல்வர் இவர்தான் என்பது தெரியவந்துள்ளது. மாயாவதியின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதற்கு, அவரின் சொத்துக்கள் எல்லாம் டில்லியில் இருப்பதே காரணம். மாயாவதிக்கு, டில்லி ஓக்லாவில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. சர்தார் படேல் மார்க்கில் உள்ள அவருக்கு சொந்தமான மனைகளின் மதிப்பு 54 கோடி ரூபாய். இதுதவிர, மாயாவதியிடம் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் உள்ளன என தெரிவித்துள்ளது.

அந்தமான் பழங்குடியினரை ஆடச் செய்து ரசித்த சுற்றுலா பயணிகள்!


அந்தமானில் ஜாரவா பழங்குடி பெண்களை நடனமாட செய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்வித்ததாக செய்தி வெளியிட்ட "டிவி' நிறுவனங்களுக்கு அந்தமான் நிகோபார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திடமிருந்து, மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில், ஜாரவா பழங்குடியினர் வசிக்கின்றனர். இன்று வரை அவர்கள் எந்த ஆடையும் உடுத்தாமல், நிர்வாணமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் இறந்து விட, தற்போது 403 பேர் மட்டுமே இந்தத் தீவில் உள்ளனர். இந்த பழங்குடி இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, இவர்கள் வாழும் காட்டு பகுதியை நோக்கி செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை செய்தி : இதற்கிடையே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், இந்த பழங்குடிகளை பார்க்க சென்றதாகவும், இவர்களை அழைத்து சென்ற போலீஸ்காரர் ஒருவர், பழங்குடியின பெண்களுக்கு பிஸ்கெட்டுகளையும், இனிப்புகளையும் வழங்கி அவர்களை நடனமாட செய்ததாகவும், இதற்காக இந்த சுற்றுலா பயணிகளிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் பிரிட்டனை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக, காட்டுப் பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் வனவிலங்குகளை பார்வையிடுவார்கள். ஆனால், அந்தமானில் இந்த நிர்வாண பழங்குடியினரை பார்ப்பதற்காகவே உள்ளூர் போலீசார் உதவியுடன் "காட்டு மனிதர்' சுற்றுலா நிகழ்ச்சி நடப்பதாக பிரிட்டனை சேர்ந்த "அப்சர்வர்' மற்றும் "கார்டியன்'பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தியை மையப்படுத்தி டில்லியை சேர்ந்த இரண்டு "டிவி' சேனல்கள் பழங்குடி பெண்களின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பின.

சேனல்களுக்கு நோட்டீஸ் : இதுகுறித்து அந்தமான் டி.ஜி.பி., எஸ்.பி.தியோல் குறிப்பிடுகையில், "அப்சர்வர் பத்திரிகை குறிப்பிட்டுள்ள பழங்குடி பெண்கள் படம் 2002ல் எடுக்கப்பட்டது. எனினும், பழங்குடியினரை காட்சி பொருளாக்கி சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவது சட்டப்படி குற்றமாகும்' என்றார். பழங்குடி பெண்களின் கவுரவத்தை இழிவுபடுத்தும் வகையில், அவர்களது நடனத்தை ஒளிபரப்பிய டில்லியை சேர்ந்த இரண்டு சேனல்களுக்கு அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பழங்குடி பெண்களை நடனமாட செய்தவர் ஒரு போலீஸ்காரர் என்பது தவறானது. அவர் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற அங்கீகாரம் பெறாத வழிகாட்டி. இது தொடர்பாக அவர் அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்தமான் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தலைநகரா, தலைவிதியென வாழவேண்டிய நரகமா?


பார்த்ததில் பிடித்தது!


ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை


Osthi (2011) Video Songs



ஒரு தலை ராகம்...


ஜனவரி 12 விவேகானந்தரின் 150வது பிறந்ததினம்...

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.  

விவேகானந்தரின் பொன்மொழிகள்:  நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி.

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள்.

மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள். உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் செவ்வாழை!


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி சிறங்கு நீங்கும் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்றுநோய் தடுக்கப்படும் தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

உடல்நடுக்கம் போக்கும் பச்சை திராட்சை...


திராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது. திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. பச்சை திராட்சை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஜீரண சக்தி தரும் பசி இல்லாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசியை தூண்டும். ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். உடல் நடுக்கம் தீரும் எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.

உடல் அசதி போக்கும் உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் பச்சைத் திராட்சைப் பழம் ஏற்றது. சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை பச்சைத் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். மாதவிலக்கு சரியாகும் தினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது. இருதயம் பலப்படும் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைத் திராட்சை மருந்தாகும். காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர வீக்கம் குணமடையும் இருதயம் பலப்படும். எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.

20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!

பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார். இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன. 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கோரி மதுரையில் வழக்கு!


அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த வீ ஆர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள் 14 நடமாடும் மருத்துவ பிரிவுகள், 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் 7 தொழுநோய் மருத்துமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். 

அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் மக்களுக்கு முழு சேவை அளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதிலும், தனியாக கிளினிக் நடத்துவதிலும் அதிக லாபம் கிடைப்பதால் அரசு டாக்டர்கள் பணியில் அலட்சியம் காட்டுகின்றனர்.

கவனக்குறைவால் மரணம் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. அந்த நேரத்தில் சொந்த மருத்துமனையில் உள்ளனர். கடந்த 6 மாதங்களில் அரசு டாக்டர்களின் கவனக்குறைவால் 70 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துமனைக்கு செல்ல கூடாது என்ற உயிர் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் போலீசார், ஆசிரியர்கள் தனியாக தொழில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தவும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கடந்த வாரம் தூத்துக்குடியில் அரசு மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக்கில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆபரேசன் செய்யும் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த மருத்துவரை கர்ப்பிணிப் பெண்ணின் கணவரே கொலை செய்தார். இந்த நிலையில் இந்த நிலையில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தியிடம் கைமாறிய என்.டி.டிவி-ஹிந்து டிவி சேனல்!


என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தப் புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் செய்திச் சேனலுக்குக் கடும் போட்டியைத் தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது.

தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் கைமாறியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மாற்றம் செய்து களமிறக்க தினத்தந்தி தீவிரமாக உள்ளதாம்.

புதிய செய்திச் சேனலின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஒ) சந்திரசேகரன் என்பவரும், செய்தி ஆசிரியராக ராஜ் டிவியில் இருந்த ஜெயசீலன் என்பரும் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ் நாளிதழ்களின் அரசனான தினத்தந்தியின் செய்திச் சேனலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சேனலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டுக்கு ஒளிபரப்பை தொடங்க தினத்தந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறையின் வருகையினால் சன் டிவியின் செய்திச் சேனலுக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தினத்தந்தியும் புதிய செய்திச் சேனலை களம் இறக்குவதால் செய்திப் போட்டி மகா கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நாள்...


  • அல்பேனியா குடியரசு தினம்(1946)
  •  இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)
  •  இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)
  •  இந்திய தொழிலதிபர் பிர்லா இறந்த தினம்(1983)
  •  நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)

கொடியுடன் உயிர்நீத்த குமரனின் நினைவுநாள்...

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நாச்சிமுத்து முதலியார் கருப்பாயம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார் குமாரசாமி.அவரே பிற்காலத்தில் கொடிகாத்த குமரனாகதன்னுயிரை ஈந்தவர். அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சென்னிமலையில் தற்போது குமரன் சதுக்கம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளி, ஆங்கில ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது. இப்பள்ளியில்தான் குமரன் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.மேல் படிப்பை தொடர பொருளாதாரம் இடந்தரவில்லை. 1914-ல் கல்வியை முடித்த இவர் 10 வயது சிறுவனாக பள்ளிபாளையத்தில் தன் தாய்மாமன் வீட்டுக்கு தொழில் தேடிச்சென்றார்.அதிலும் நிறைவடையாத அவர் மீண்டும் சென்னிமலைக்கே வந்து குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து வந்தார். இளமைப் பருவத்திலேயே எளிய குடும்பத்தின் வருவாயைப் பெருக்க வேண்டிய சுமை குமரனின் தோளில் இறங்கியது. 

ஈரோட்டில் உள்ள கடைக்கார் ஒருவரிடம், வாரம் ஒரு முறை நூல் எடுத்து வந்து, பாவோடிக் கஞ்சி தோய்த்து கைத்தறியில் சேலையாக நெய்து மீண்டும் அதை ஈரோட்டுக்கு எடுத்து சென்று உரிய கடைகாரர் இடம் ஓப்படைத்து கூலியும் நூலும் பெற்றவருவது அவரது வழக்கம். வறுமைபிடியில் சிக்கிதவித்த குமரனின் குடும்பம் 1916-ம் ஆண்டு திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. திருப்பூருக்கு சென்ற குமரன் ஓ.கே., சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூரை சேர்ந்த ஈ.ஆர். ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சு தரகு மண்டியில் எடை குறிப்பு எழுத்தர் வேலைக்கு சேர்ந்தார்.

தேச பந்து வாலிபர் சங்கம் என்ற விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இந்திய விடுதலை போரில் குமரன் ஈடுபட தொடங்கினார். கள்ளுகடை மறியல், அந்நிய பொருட்களை எரித்தல் போன்ற காந்தியடிகள் அழைத்த போராட்டங்களுக்கு எல்லாம் சிரம் ஏற்று சென்றார். 6.1.1932-ம்தேதி மாலை திருப்பூர் நொய்யல் நதிகரையில் காந்தியை கைது செய்ததற்காக கண்டன கூட்டம் நடந்தது அக்கூட்டத்தில் அதில் 11.1.1932-ல் திருப்பூர் நகரில் சட்டமறுப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அன்று அச்சமில்லை... அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாரதியின் வைரவரிக ளை விண்அதிர முழுங்கி கொண்டு கொடி பிடித்து கொண்டு முன்னேறி சென்றார் குமரன். எழுச்சி மிகு ஊர்வலம் கண்டு தாக்கமுடியாமல் குண்டதடி தாக்குதல் நடத்தினர் வெள்ளையர். அதில் குரமனின் மண்டை பிழந்து கொட்டிய செந்நீர் தாயக மண்ணை மேலும் சிவப்பாக்கியது.

வீர திருமகன் செயல் அற்று போய் தரையில் சாய்ந்தார் அந்திலையிலும் அவரது வலது மணிக்கரம் பற்றிய தேசிய கொடி கீழே விழவில்லை. மண்ணுக்கு உடலை தந்து மணிக்கொடிக்கு தன் மார்பை தந்தார். சென்னிமலை குரமன் தானே ஒரு வரலாறாக மாறிவிட்டார் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என மூன்றை இழந்தவர்கள் என்ற தியாகப்பட்டியலில் தியாகி குமரன் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்துள்ளார் சாவை சடங்கா நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்தரம் ஆக்கியவர் தியாகி குமரன். சென்னிமலையில் அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

10 January, 2012

பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜை!


ஏற்காட்டில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை கரிநாளுக்கு அடுத்து வரும் நாளில், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்காடு மலையில் அமைந்துள்ள வெள்ளக் கடை கிராமத்தில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை, கரிநாளுக்கு அடுத்த நாள், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜையாக நடக்கும். இந்த பூஜையில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை மட்டுமே பங்கேற்க முடியும். ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை பூஜையின் போது, தாயுடன் வைத்து கொள்ளலாம். விசேஷ அம்மன் பூஜை நடக்கும் போது, வெள்ளக்கடையில் உள்ள ஆண்கள் அனைவரும், ஊரை விட்டு வெளியேறி விடுவர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் பூஜையில், அம்மனுக்கு பிடித்த கேழ்வரகு, பழம், பூ, தேங்காய் வைத்து படையல் செய்யப்படும். ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று, பெண்கள் எல்லை தெய்வத்தை வழிபடுவர். அதன் பின், ஊர்வலமாக சென்று, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். இந்த விசேஷ பூஜை நடக்கும் நாளில், வெளியூரில் இருந்து உள்ளூருக்குள் எந்த நபரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, வெள்ளக்கடையை சேர்ந்த ஆண்கள் ஊர் எல்லையில் கம்பு நட்டு, காவலுக்கு இருப்பர்.  புத்தாடை அணிந்து பூஜையில் ஈடுபடும் பெண்கள், கும்மி பாட்டு பாடியும், நடனமாடியும், அம்மனை வழிபடுவர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் வழிபாடு முடிந்ததும், பெண்கள் படையல் செய்த பதார்த்தங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். இந்த விசேஷ பூஜை முடிந்ததும், சிறுமி மூலம் ஊர் எல்லையில் காவலுக்கு இருக்கும் ஆண்களுக்கு, "சமிக்ஞை கொடுக்கப்படும். அதன் பின், ஊர் எல்லையில் இருக்கும் ஆண்கள் ஊருக்குள் வந்து, அம்மனை வழிபடுவர். வரும் பெங்கல் பண்டிகையையொட்டி பெண்களால் கொண்டாடப்படும் விசேஷ அம்மன் வழிபாடுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை, வெள்ளக்கடையை சேர்ந்த மக்கள் செய்து வருகின்றனர்.  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெண்கள் பங்கேற்கும் அம்மன் பூஜை சம்பந்தமாக, பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையில் வெள்ளக்கடை பெண்களால் நடத்தும் பூஜை, அரசு மற்றும் உளவுத்துறை கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த ஊரை சேர்ந்த மக்கள் மனம் வருத்தம் அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். 2005ம் ஆண்டு, ஆர்.டி.ஓ.,வாக சேலத்தில் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி தலைமையிலான பெண் வருவாய் அலுவலர்கள், வெள்ளக்கடையில் பெண்கள் நடத்தும் பூஜையை நேரடியாக கண்காணித்து, வீடியோ மூலம் பதிவு செய்து வெளிகாட்டினர். அதன்பின்னரே, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பூஜை மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சென்னையில் 2012 - 9 நாளில் 9 கொலைகள்

 சென்னையில் புத்தாண்டு தொடங்கி முதல் 9 நாட்களில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளது போலீசாருக்கு சவாலை அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் கொலை, மடிப்பாக்கத்தில் ஒருவர் கொலை மற்றும் அம்பத்தூரில் பகுதிநேர அழகுக்கலை நிபுணர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த கொலைச் சம்பவங்களில் 5 சம்பவங்களில் மட்டும் தீர்வுகாணப்பட்டுள்ளது. மேற்குசென்னையில் நடந்த 3 கொலையில் 2 கொலையில் நாங்கள் தீர்வுகண்டுள்ளோம். மற்றொரு கொலைச்சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளோம் என மேற்குபகுதி இணை கமிஷனர் கே.சங்கர் தெரிவித்தார்.


கொள்ளையடிக்கும் நோக்கம் மற்றும் முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கொலைகள் நிகழ்கின்றன. ஜனவரி 2-ம் தேதி வங்கி ஊழியர் அருணா சீதாலட்சுமி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது படுக்கை அறையில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதி அம்பத்தூரில் ஒருவர் தனது மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றார். அதற்கு அடுத்தநாள் கொருக்குப்பேட்டையில் மற்றொருவர் தனது மனைவியைக் கொன்றார் மற்றும் ஒரு கும்பல் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றது.சனிக்கிழமையன்று சமையல்கலைஞர் மணி பாரதி என்பவரை கீழ்ப்பாக்கத்தில் பாட்டிலால் ஒருவர் குத்திக் கொன்றார்.


இதுபோன்ற கொலைவழக்குகளை கையாள தனிப்பிரிவை உருவாக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். 2011-ல் சென்னை நகரத்தில்தான் அதிக கொலைச்சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை யில் மட்டும் 139 கொலைகளும், அடுத்தபடியாக விழுப்புரத்தில் 74 கொலைகளும், திருநெல்வேலியில் 72 கொலைகளும் நடைபெற்றுள்ளதாக மாநில குற்றப்பிரிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 அக்டோர் வரை மொத்தம் 1506 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2010-ம் ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். இந்த 1506 வழக்குகளில் 1408 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி தேர்வு


 மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்றார் கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி சந்திரசேகர். விவெல் மிஸ் இந்தியா சவுத் 2011 போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் உள்விளையாட்டரங்கில் நடந்தன. விவெல் நிறுவனத்துடன், மாயா ஈவன்ட்ஸ் மற்றும் இ3 இன்னொவேஷன்ஸ் நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் மட்டும் 18 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் சிறந்த தென்னிந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார் (21). இவர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் படிக்கும் மாணவி. சென்னைதான் இவரது சொந்த ஊர். 

ஷிமோகா அழகி இரண்டாவது சிறந்த அழகியாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி தேர்வு செய்யப்பட்டார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றுகிறார். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இப்போது நடிகர் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 
நடிகர் பிராஷாந்த் முதலிடம் பெற்ற ரோகிணிக்கு, நடிகர் பிராந்த் கிரீடம் சூட்டி வாழ்த்தினார். போட்டி நடுவராக இருந்தார் கடந்த ஆண்டு தென்னிந்திய அழகிப் பட்டம் சூடிய சாவ்யா. இந்த விழாவி்ல டிசைனர் பிரியங்கா பங்கேற்றார்.சிறந்த தென்னிந்திய அழகிப் பட்டம் வென்ற ரோகிணி, இதுகுறித்து கூறுகையில், "எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய அளவில் போட்டி இருந்தது. இறுதிப் போட்டிக்கு மட்டுமே 18 பேர் நான்கு மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து நான் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வானேன்.

இந்தப் போட்டியில் உடல் அழகு மட்டுமல்ல, மன அழகு, அறிவு எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கிறதா என்றுதான் பார்த்தார்கள். இறுதிச் சுற்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: 'உங்களுக்கு ஒரு காதலர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பட்டத்தை வென்றால் அதை முதலில் யாரிடம் சொல்வீர்கள்... பெற்றோரிடமா அல்லது காதலரிடமா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நிச்சயம் பெற்றோரிடம்தான் சொல்வேன். அவர்கள் அனுமதியோடு காதலர் அல்லது ஆண் நண்பரிடம் சொல்வேன்' என்றேன். 

இப்போதே நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. நல்ல படமாக தேர்வு செய்து நடிப்பேன்," என்றார். 'ஏற்கெனவே நடிக்க ஆரம்பித்துவிட்டேன்' இரண்டாம் இடத்தைப் பிடித்த அழகியான அஸ்வினி சந்திரசேகர் கூறுகையில், "கர்நாடக மாநிலம் என்றாலும் எனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும். ஏதோ வழக்கமாக சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். ஷிமோகாவில்தான் பிறந்து வளர்ந்தேன். இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ஏற்கெனவே கர்நாடகத்தின் சிறந்த அழகியாக தேர்வாகியுள்ளேன். இது எனக்கு கிடைத்த இரண்டாவது பெரிய டைட்டில். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. பேசிக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன். விரைவில் தமிழ் சினிமாவிலும் என்னைப் பார்க்கலாம்," என்றார்.

எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் மோசடி!


எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் அதிநவீன முறையில் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத முதுநிலைப்படிப்பு இடங்களை நிரப்புவதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் 156 மையங்களில் நடந்தது. இந்து நுழைவுத் தேர்வில் மோசடி நடப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிலும் குறிப்பாக நொய்டா செக்டார் 28க்கு சென்றால் தெரியும் என்று தகவல் கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த மையத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் கபில், கிருஷன் மற்றும் டாக்டர் பூனியா ஆகிய 3 பேர் சிக்கினர். விசாரணையில் கபில் குமார் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும், கிருஷன் பிரதாப் ஐஐஎம்டி- மீருட்டிலும் எம்.பி.ஏ. படித்தவர்கள் என்பதும், பூனியா ரோதக்கில் உள்ள பிஜிஐல் எம்பிபிஎஸ் படித்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் முதுநிலை மருத்துவப்படிப்பு நுழைவத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். கபில், கிஷன் மற்றும் பூனியா நொய்டாவில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வந்தனர். அதில் கபிலும், கிஷனும் முழுக்கை சட்டை அணிந்திருந்தனர். கைப் பகுதியில் செல்போன்களும், காலரில் புளூடூத் கருவிகளும் வைத்திருந்தனர். கேள்வித் தாள் கொடுக்கப்பட்டவுடன் அவர்கள் தங்கள் செல்போன் கேமரா மூலம் அந்த தாளை படமெடுத்து தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் பீஷ்மா சிங்கிற்கு அனுப்பினர்.

அதை பீஷ்மா பிரிண்ட் அவுட் எடுத்து மோஹித் சவுத்ரி என்னும் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவரிடம் கொடுத்தார். அவர் உஜ்ஜைனில் படித்து வந்தார். கேள்வித் தாளை பெற்றுக் கொண்ட மோஹித் புத்தகங்களை வைத்து அந்த கேள்விகளுக்கான பதில்களை வாசித்தார். அந்த பதில்களை தேர்வு மையத்தில் இருந்த கபிலும், கிருஷனும் தங்கள் காதில் பொருத்தியிருந்த இயர் பீஸ் மூலம் கேட்டு விடைகளை எழுதியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பீஷ்மா சிங், மோஹித் சவுத்ரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதே மையத்தில் தேர்வு எழுதிய 6 மருத்துவர்கள் விடைகளைப் பெற இந்த கும்பலுக்கு ரூ. 30 முதல் 40 லட்சம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...