|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

சென்னையில் 2012 - 9 நாளில் 9 கொலைகள்

 சென்னையில் புத்தாண்டு தொடங்கி முதல் 9 நாட்களில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளது போலீசாருக்கு சவாலை அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் கொலை, மடிப்பாக்கத்தில் ஒருவர் கொலை மற்றும் அம்பத்தூரில் பகுதிநேர அழகுக்கலை நிபுணர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த கொலைச் சம்பவங்களில் 5 சம்பவங்களில் மட்டும் தீர்வுகாணப்பட்டுள்ளது. மேற்குசென்னையில் நடந்த 3 கொலையில் 2 கொலையில் நாங்கள் தீர்வுகண்டுள்ளோம். மற்றொரு கொலைச்சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளோம் என மேற்குபகுதி இணை கமிஷனர் கே.சங்கர் தெரிவித்தார்.


கொள்ளையடிக்கும் நோக்கம் மற்றும் முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கொலைகள் நிகழ்கின்றன. ஜனவரி 2-ம் தேதி வங்கி ஊழியர் அருணா சீதாலட்சுமி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது படுக்கை அறையில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதி அம்பத்தூரில் ஒருவர் தனது மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றார். அதற்கு அடுத்தநாள் கொருக்குப்பேட்டையில் மற்றொருவர் தனது மனைவியைக் கொன்றார் மற்றும் ஒரு கும்பல் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றது.சனிக்கிழமையன்று சமையல்கலைஞர் மணி பாரதி என்பவரை கீழ்ப்பாக்கத்தில் பாட்டிலால் ஒருவர் குத்திக் கொன்றார்.


இதுபோன்ற கொலைவழக்குகளை கையாள தனிப்பிரிவை உருவாக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். 2011-ல் சென்னை நகரத்தில்தான் அதிக கொலைச்சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை யில் மட்டும் 139 கொலைகளும், அடுத்தபடியாக விழுப்புரத்தில் 74 கொலைகளும், திருநெல்வேலியில் 72 கொலைகளும் நடைபெற்றுள்ளதாக மாநில குற்றப்பிரிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 அக்டோர் வரை மொத்தம் 1506 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2010-ம் ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். இந்த 1506 வழக்குகளில் 1408 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...