|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் மோசடி!


எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் அதிநவீன முறையில் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத முதுநிலைப்படிப்பு இடங்களை நிரப்புவதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் 156 மையங்களில் நடந்தது. இந்து நுழைவுத் தேர்வில் மோசடி நடப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிலும் குறிப்பாக நொய்டா செக்டார் 28க்கு சென்றால் தெரியும் என்று தகவல் கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த மையத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் கபில், கிருஷன் மற்றும் டாக்டர் பூனியா ஆகிய 3 பேர் சிக்கினர். விசாரணையில் கபில் குமார் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும், கிருஷன் பிரதாப் ஐஐஎம்டி- மீருட்டிலும் எம்.பி.ஏ. படித்தவர்கள் என்பதும், பூனியா ரோதக்கில் உள்ள பிஜிஐல் எம்பிபிஎஸ் படித்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் முதுநிலை மருத்துவப்படிப்பு நுழைவத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். கபில், கிஷன் மற்றும் பூனியா நொய்டாவில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வந்தனர். அதில் கபிலும், கிஷனும் முழுக்கை சட்டை அணிந்திருந்தனர். கைப் பகுதியில் செல்போன்களும், காலரில் புளூடூத் கருவிகளும் வைத்திருந்தனர். கேள்வித் தாள் கொடுக்கப்பட்டவுடன் அவர்கள் தங்கள் செல்போன் கேமரா மூலம் அந்த தாளை படமெடுத்து தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் பீஷ்மா சிங்கிற்கு அனுப்பினர்.

அதை பீஷ்மா பிரிண்ட் அவுட் எடுத்து மோஹித் சவுத்ரி என்னும் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவரிடம் கொடுத்தார். அவர் உஜ்ஜைனில் படித்து வந்தார். கேள்வித் தாளை பெற்றுக் கொண்ட மோஹித் புத்தகங்களை வைத்து அந்த கேள்விகளுக்கான பதில்களை வாசித்தார். அந்த பதில்களை தேர்வு மையத்தில் இருந்த கபிலும், கிருஷனும் தங்கள் காதில் பொருத்தியிருந்த இயர் பீஸ் மூலம் கேட்டு விடைகளை எழுதியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பீஷ்மா சிங், மோஹித் சவுத்ரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதே மையத்தில் தேர்வு எழுதிய 6 மருத்துவர்கள் விடைகளைப் பெற இந்த கும்பலுக்கு ரூ. 30 முதல் 40 லட்சம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...