|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 February, 2012

tamil Magazine Read nakkeran 5th feb 2012 edition online

Download Nakkeran 15-02-12 tamil Magazine

Read nakkeran 5th feb 2012 edition online
Nakkeeran 15022012
Click here to Download Nakkeran 15-02-12
 

விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம்!


 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம் முதல் முறையாக அறிவித்திருக்கிறது. இதற்காக 5 நபர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை அமைத்து ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய உத்தரவிட்டிருக்கிறார்.போர்க்குற்றங்கள் தொடர்பாகவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சூழலில், ஏற்கனவே அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக, இன்னும் ஒரு நாடகமாக இலங்கை ராணுவம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எத்தனையோ வீடியோக்கள் சர்வதேச நாடுகளில் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் சேனல்4- தொலைக்காட்சி, நெஞ்சை உறைய வைக்கும் கொடூர காட்சிகளையும் வெளியிட்டிருந்தது. ஆனால் அதுகுறித்து விசாரிக்க முடியாது என்று பிடிவாதமாகவும், தெனாவெட்டாகவும் கூறி வந்தது இலங்கை. இலங்கையை இந்தியாவும் கூட சற்றும் கண்டிக்கவில்லை, நிர்ப்பந்திக்கவில்லை, கேள்வி கூட கேட்கவில்லை. தற்போது அமெரிக்காவே சற்று கோபமடைந்து, தனக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறி விட்டதால் பயந்து போய் இந்தப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது இலங்கை. இதை வைத்து இன்னும் கொஞ்ச காலம் உலகத்தை ஏமாற்றலாம் என்பது அதன் எண்ணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றங்களை யாரேனும் செய்ததற்கான 'முகாந்திரம்' இருந்தால் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபையின் தீர்மானத்தை அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரிக்க உள்ளன. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் ராமதாஸ்!

திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்ததுதான் நான் செய்த தவறு, இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாகக் கூறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மின்வெட்டுதான் கிடைத்துள்ளது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டு விடுதலை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை உள்ளது. கிராமப்புறத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இருப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது தெரியவில்லை. கோவையில் உள்ள சிறு, குறுந் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் தினமும் ஒரு கொலை நடக்கிறது. பெருங்குடி வங்கிக் கொள்ளையர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


1967 - ல் இருந்து சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள். இதன் காரணமாக  திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை  சீர்கேட்டிற்கு இழுத்து சென்று விட்டது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம். மாறி, மாறி கூட்டணி வைத்தது தான் நான் செய்த பெரிய தவறு.  திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு கொடுத்தது மூன்றுதான். குடி, சினிமா மோகம், இலவசம் இவற்றைத்தான் திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு கொடுத்துள்ளன. சினிமாக்காரர்களை நம்பி தமிழகம் சீரழிந்தது போதும்.  தமிழகம் வளம் பெற சினிமா மோகத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகிலேயே மிகச்சிறிய பல்லி.

மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்வது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெர்மனி உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 18 மில்லி மீட்டர் உயரமே கொண்ட பல்லிகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டு பிடிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் சிறிய பல்லி ஆகும். 

நடிகர் ஆர்என்கே.பிரசாத் மரணம்!

பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான ஆர்என்கே.பிரசாத்(81) சென்னையில் 15.02.2012 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு உஷா என்ற மனைவியும் ராஜீவ் பிரசாத் என்ற மகனும், மாலாராவ் என்ற மகளும் உள்ளனர்.ஆர்என்கே.பிரசாத் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் தந்தையாக நடித்துள்ளார். மேலும் சித்தி, மர்ம தேசம் உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், சிட்டுக்குருவி உள்பட 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். இவருக்கு 15.02.2012 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

15 February, 2012

இதே நாள்...

  • லித்வேனியா விடுதலை தினம்(1918)
  •  இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி தாதாசாஹெப் பால்கே இறந்த தினம்(1944)
  •  கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது(2005)
  •  வொலஸ் கரோத்தேர்ஸ், நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்(1937)
  •  எக்ஸ்புளோரர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது(1961

ஃபேஸ்புக்கிலேயே ரயில்களில் இடவசதி...


ஃபேஸ்புக் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், ஃபேஸ்புக் தற்போது ரயில்களில் இடவசதி மற்றும் ரயில்களின் கால அட்டவணை குறித்த விபரங்கள் பற்றிய சேவையை வழங்க உள்ளது.
பயனீட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நித்தமும் புதிய வசதிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது டெல்லி ரயில்வே ஃபேஸ்புக்கில் இணைய உள்ளது. இதனால் ரயில் டிக்கெட், இடவசதி குறித்த விபரங்கள், ரயில்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்த கால அட்டவணை உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் இனி ஃபேஸ்புக் மூலம் அறிந்து கொள்ளலாம்..தேசிய ரயில்வே விசாரணை சேவை வசதியுடன் ஃபேஸ்புக் இணைக்கப்பட இருப்பதாக டெல்லி ரயில்வே துறையின் மூத்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் வசதி இப்பொழுது நிறைய மொபைல்களிலேயே வழங்கப்படுகிறது.
இதனால், ரயில் பயணிகள் இனி தங்களது மொபைலில் இருந்தே ஃபேஸ்புக் மூலம் அனைத்து ரயில்வே விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று டெல்லி ரயில்வே தெரிவித்துள்ளது.கையில் வைத்திருக்கும் மொபைலில் ஃபேஸ்புக் வசதி இருந்தால் போதும். இதில் ரயில் வருகையில் இருந்து அனைத்து விதமான தகவல்களையும் எளிதாக பெறலாம். இதில் ரயில் வந்து நிற்கும் ப்ளாட்ஃபார்ம் நம்பர் முதல் கொண்டு சரியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

the world's most expensive city in a new survey.



Top 10
Rank                City                 Country                       WCOL index (New York= 100)
1                     Zurich              Switzerland                 170
2                     Tokyo              Japan                           166
3                     Geneva           Switzerland                 157
3                     Osaka             Japan                            157
5                     Oslo                Norway                         156
6                     Paris               France                           150
7                     Sydney           Australia                       147
8                     Melbourne    Australia                       145
9                     Singapore       Singapore                  142
10                   Frankfurt        Germany                     137
Bottom 10
Rank                City                 Country                       WCOL index (New York= 100)
120                 Muscat            Oman                            63
123                  Dhaka             Bangladesh               61
124                 Algiers            Algeria                          59
125                Kathmandu    Nepal                            58
125                 Panama City   Panama                     58
127                 Jeddah            Saudi Arabia              57
128                 New Delhi       India                            56
129                 Tehran            Iran                              54
130                  Mumbai          India                            52
131                 Karachi           Pakistan                     46
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, துணிமணிகள் வாங்குதல், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, கல்வி கட்டணம் ஆகிய புள்ளி விவரத்தை வைத்து இதை தீர்மானித்தனர். இதில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் மிகவும் செலவு ஏற்படுவதாக தெரியவந்தது.

இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகர் தான், டோக்கியோவை முந்திக் கொண்டு முதலிடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு சூரிச் 5 வது இடத்தில் இருந்தது. முதல் 20 இடங்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 நகரங்கள் இடம் பெற்றன. சிட்னி 7 வது இடமும், மெல்போர்ன் 8 வது இடமும் பெறுகிறது.

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கனடாவில் உள்ள வான்கவுவெர் நகரம், அமெரிக்க நகரங்களை விஞ்சி 37 வது இடம் பெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சீனாவின் சாங்காய் ஆகியவை 42 வது இடத்தையும், நிழூயார்க் 47 வது இடமும் பெற்று இருக்கின்றன.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் ஒரு இடம் முன்னேறி 9 வது இடத்திலும், சியோல் 9 இடம் உயர்ந்து 27 வது இடத்திலும் உள்ளன. இந்திய துணை கண்டத்தில் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் இடம் பெற்றுள்ளன


திருஷ்டி கழிக்க...

திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும்போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்கவேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும், மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ, அதுபோன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல், பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல், வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல், பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.  தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது, எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.

Ex-US President Eisenhower secretly met ‘aliens’ 3 times


வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகிஉள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான 



அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் 



தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை 




அழிவுக்குக் காரணமாகும்.




2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் 





சக்தி குறைவுக்குக் காரணமாகும்.



3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.



4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் 





தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.



5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் 





பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், 





மூளை பாதிப்படையும்.



6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான 





அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.



7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு 





அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. 





குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.



8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், 





தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், 





மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.



9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், 





மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை 





வலிமையான உறுப்பாக ஆகிறது.



10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை 





அதிகரிக்கிறது.

14 February, 2012

இதே நாள்...


  • செர்பியா தேசிய தினம்
  •  யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(2005)
  •  அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
  •  ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)

Vettai DVD


இவன் சத்ரியன் MOVIE


பார்த்ததில் பிடித்தது!

எச்சரிக்கை: எதிர்கால தமிழகம்....தமிழனே தனிநாடு கேள் தண்ணீராவது 


உனக்கு கிடைக்கும்.







மரத்த வெட்னா, இப்படி தான் நாளைக்கு 


அவனுங்களும் கேடக்கனும்னு தெரியாத மனசாட்சி 


இல்லாத மடையன்கள்...





காரில் பிரேக் பிடிக்காமல் போனால்...?

கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குகளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது. ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!

எப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவமதிப்பது ஆபத்து பேச்சுவார்த்தை சின்னதாக தொடங்கும்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை தேடவேண்டும். அதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிர்பேச்சுப் பேசி அவமதிக்கும் வகையில் பேசுவது மிகச்பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது.

உண்மையை கண்டறியுங்கள் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் எனவே உங்கள் துணைவரைப் பற்றி உங்களுக்குத்தான் முழுதாக தெரிந்திருக்க வேண்டும். உங்க வீட்டுக்காரரை அங்கே பார்த்தேனே என்று பக்கத்தில ஒரு பொண்ணு இருந்திச்சே என்று யாராவது கொளுத்திப் போட்டால் அதையே சாக்காக வைத்து வீட்டுக்கு வந்த உடன் குடையக்கூடாது. அவராக ஏதாவது சொல்கிறாரா என்று அமைதி காக்கவும். இல்லையா வேறு டாபிக் ஏதாவது பேசிவிட்டு அதோடு சேர்த்து மெதுவாக கேட்கவும். அப்புறம் சண்டைக்கு ஏது வழி? எது உண்மை என்று தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதுதான்.

முயலுக்கு மூன்று கால் எப்பொழுதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். உங்கள் பக்கம் தவறு நேரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாழ்க்கைத்துணையானவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேளுங்கள். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணமல் போய்விடும். அப்புறம் யார் பெரியவர், யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்யவேண்டியதுதான். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும்.

தினமும் எழுதுங்கள் அன்றாடம் நடந்தவைகளை தினமும் எழுதுங்கள். அலுவலகமோ, வீடோ, எங்கே என்ன நடந்தது என்பதை எழுதி துணையின் பார்வைக்கு வைக்கலாம். அவர் அணிந்திருந்த உடை அழகாயிருந்தால் அதையும் கவிதையாய் குறிப்பிடலாம். தேவையற்ற பேச்சுக்கள் குறையும். உங்கள் செயல் யோசிக்க வைக்கும். சிறிய தவறென்றாலும் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்புறமென்ன நீங்கள் தான் ஆதர்ச தம்பதிகள்.

சாணக்குழியில் வாயில் துணி திணித்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!


சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் சாணக்குழியில் கிடந்தது. அக்குழந்தையை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் சம்போடைவனம் பகுதியில் சாணம் கொட்டும் குப்பைக் குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குப்பைகளை கொட்டுவது வழக்கம்.நேற்று காலையில் சாணக்குழியில் சிலர் குப்பைகளை கொட்ட வந்த போது குழிக்குள் பச்சிளம் குழந்தையின் கால்கள் தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குப்பைகளை அகற்றிப் பார்த்தபோது பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் குழந்தை கிடந்தது.

குழியில் வீசப்பட்ட குழந்தை அழுவது வெளியே கேட்காத வகையில் அதன் வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தை கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அந்த குழந்தை 2.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பிறந்த குழந்தையை சாணக்குழியில் வீசியது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? சாணக்குழியில் வீசப்பட்ட காரணம் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...