அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரோட்டில் மயங்கி கிடந்த வயதானவரை மனிதநேயத்துடன் காப்பாற்ற சென்றவர் பலமணிநேரம் அல்லல்பட்டார்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கப்பற்படையில் பணிபுரிந்தவர். தேசிய மனித உயிர் காக்கும் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று காலை 8.30 மணிக்கு டூவீலரில் விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தார்.பெரியபுளியம்பட்டி-பாலவநத்தம் இடையே ரோட்டோரம் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் மயங்கி கிடந்தார். "மதுபோதையில் மயங்கியவர்' என நினைத்து விருதுநகர் சென்று விட்டு, மதியம் 12.30 மணிக்கு திரும்பும் போதும் அதே இடத்தில் கிடந்தார். உடனே "108' ஆம்புலன்”க்கு தகவல் தெரிவித்தார். ஒரு மணிநேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் சேர்க்க நீங்களும் உடன் வர வேண்டும் என்று ஆம்புலன்சில் வந்தவர்கள் கூறினர்.
தன்னுடன் வந்த தனது மகன் ஜெயசூரியாவை(12) ஆம்புலன்சில் ஏற்றி, இவரும் பின் தொடர்ந்தார். அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது, "முதியவரை தன் உறவினர்' என கூற வேண்டும் ஜெயசூரியாவிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தனர். பரிசோதித்த டாக்டர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியிருக்கலாம் என்றார். சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய முதியவர் தான், கீழ்க்குடியை சேர்ந்த பொன்னுராம்(70) என்றார். இதன் பின்னர் ஜெயச்சந்திரன், மகனுடன் மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார்.
இதுபற்றி இவர் கூறியதாவது: "108' ஆம்புலன்ஸ் சேவை நன்கு பயன்படுகிறது. இருந்தாலும் உதவி செய்ய முன் வந்தவர்களிடம் பல கேள்விகள் கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றனர். மேலும், ஆஸ்பத்திரியில் சேர்க்க கண்டிப்பாக ஒருவர்வேண்டும் என்கின்றனர். முதலில் உயிரை காப்பாற்றி விட்டு மற்றவை பற்றி விசாரிக்க அரசு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment